இப்பிறவியிலேயே வாழ்ந்து முத்தி அடைய தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்!

பிறவியில் வாழ முக்தி வேண்டி நீங்கள் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்.

Update: 2022-02-10 23:45 GMT

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதனுடைய வரலாறு நிறைந்த பல்வேறு கோவில்களை கொண்டுள்ளது. அதில் தற்பொழுது கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் நீங்கள் இவ்வாறு இப்பிறவியிலேயே முக்தி அடைய என்னென்ன ஆலயங்களை தரிசிக்க வேண்டும்? என்பது பற்றி தற்பொழுது பார்ப்போம். முதலில் முதலில் நீங்கள் முத்தி என்பது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். முக்தி என்பது வீடுபேறு என்ற தமிழில் அடைக்கப்படுகிறது. அதாவது சிப்பிக்குள் விழுகும் நீரானது இறுகி இறுதியில் முத்தாக மாறுகிறது அதேபோல உடலினுள இருக்கும் உயிரானது இறுதியில் இம்மண் உலகை விட்டுப் பிரியும் தருணத்தில் மேலோகத்தில் அடையும் தருணத்தில் தான் முக்தி என்று கூறுகிறார்கள். 


சமய நூல்களின் படி முக்தி என்பது இறைவனடி சேர்தல் என்று கூறப்படுகிறது. எனவே அப்படி நீங்கள் இந்த பிறவியிலேயே நன்றாக வாழ்ந்து முடித்த பிறகு நல்ல முக்தி நிலையை அடைந்து மேலுலகம் செல்ல வேண்டும் என்பதற்காக மக்கள் காசியாத்திரை, ராமேஸ்வரம் போன்ற பல்வேறு யாத்திரைகள் செல்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட தளங்களில் நீங்கள் செல்ல வேண்டிய மிக முக்கிய தளமாக காஞ்சிபுரம் விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசந்தர் கோயில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலுக்குள் நுழைந்ததும் கும்பகோணத்தின் தாராசுரம் கோயில் நினைவுக்கு வருகிறது. இத்தலம் சிவன் காஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. 


காஞ்சிபுரம் அம்மன் கோயில் சென்றால், நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றி அடைய இந்த கோயிலை சென்று தரிசிக்கலாம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இது பூமியைக் குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாகும். கோவிலில் 3500 ஆண்டுகள் பழமையான மாமரம் உள்ளது. கர்ச்சபேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும், இது விஷ்ணுவுடன் தொடர்புடையது. வைணவம் மற்றும் சைவ பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News