கன்னியாகுமரியின் 'பெரிய கோவில்'!
பல்வேறு அற்புதங்கள் நிறைந்த கோலவார்குழலாள் ஈஸ்வரி உடனுறை சோழராஜா கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் அருகில் 'ஒழுகினசேரி' பகுதியில் உள்ள பழைய ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பெரிய கோவில். இது சோழ மன்னனர் அமைத்த சிவன் கோவில்களில் ஒன்றாகும். தற்போதுள்ள நாகர்கோவில் முன்பு 'கோட்டார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது .பின்னர் நகரமயமாதல் காரணமாக நாகர்கோவில் என்ற பெயரில் நகரப் பகுதிகள் மாறிவிட்டன .ஆகவே நாகர்கோவிலில் நுழைவு வாசலாக ஒழுகினசேரி திகழ்கிறது. 'உலக முழுதுடையான் சேரி' என்ற பெயரே காலப்போக்கில் மருவி ஒழுகின சரி என்று மாறியதாக கூறப்படுகிறது.
இங்கு 'அரவநீள்சடையான்' என்ற பெயரில் மகாதேவர் ஆன சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பூம் குரலில் என்ற பெயரில் கோலவார் குழலி என்ற பெயரில் ஈஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள் புரிகிறார். கிபி பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் மகன் ராஜேந்திர சோழீஸ்வரனால் கட்டப்பட்டது இந்த சோழராஜா கோவில். இந்த சோழராஜா கோவில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை மாதிரியாக கொண்டு வடிவமைத்து இருக்கிறார்கள். எனவே இதை குமரி மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில் என்றும் கூறுகிறார்கள்.
இங்கு மூலவர் லிங்க வடிவில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். ராஜேந்திர சோழீஸ்வரன் சேரநாட்டை கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையில் இருந்து பெரும் படைகளுடன் வந்து நாகர்கோவிலில் தங்கி உள்ளார். அப்போது அவரது கனவில் சிவபெருமான் தோன்றி அங்கு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்து விட்டார். அதைத் தொடர்ந்து இங்கு ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எழுப்பப்பட்டு உள்ளது. இங்கு மூலவரான 'அரவநீள் சடையான்' சன்னிதி உயரமான மேடை போல் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் படி ஏறி தான் சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும். சோழ மன்னர் உருவாக்கம் செய்ததால் சோழராஜா கோவில் என்ற பெயரில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.