காதலர்களை காப்பாற்றிய கரிக்ககம் சாமுண்டி தேவி!
கரிக்ககம் என்ற இடத்தில் மூன்று ரூபங்களில் காட்சி தரும் சாமுண்டி தேவியின் ஆலயம் பற்றி காண்போம்.
கரிக்ககம் என்ற இடத்தில் சாமுண்டி தேவி மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறாள். சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என்ற மூன்று விதமாக இத்தல அம்மனை பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். வேதங்களை கற்றறிந்த ஞானி ஒருவர் யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடனாக ஏற்று அவருக்கு பல போதனைகளையும் அருள்வாக்கையும் அருளினார். தன் குருவை போலவே யோகீஸ்வரனும் பராசக்தியை வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை யோகீஸ்வரனின் முன்பு ஒரு சிறுமி வடிவத்தில் பராசக்தி தோன்றினாள். அந்த சிறுமியை குருவாகவும் சீடனும்க சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து பச்சை பந்தல் அமைத்து குடியமர்த்தினர்.
அப்போது அந்த சிறுமி அவர்களுக்கு அம்பிகையாக காட்சியளித்து 'நான் இங்கேயே குடி கொள்வேன் என்று கூறி' மறைந்தாள். இதை அடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன் ஒரு அம்மன் சிலையை சிறுமி மறைந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே தற்போது கரிக்ககம் சாமுண்டியாக அருள் பாலிக்கிறார். இந்த அம்மனை பராசக்தி என்றும் பகவதி என்றும் பரமேஸ்வரி என்றும் அழைத்து மக்கள் வழிபடுகின்றனர். சேர மன்னர் ஒருவரின் ஆட்சி காலத்தில் அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை சிறையில் அடைத்து விட்டனர் .
சிறையில் அடைக்கப்பட்ட அந்த காவலனுக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் அதே அரண்மனையில் அரசியின் தோழிகளில் ஒருத்தி ஆவாள். அவள் அரசியிடம் ஓடிச் சென்று 'நான் தான் குற்றவாளி. என் காதலருக்கு பதிலாக என்னை சிறையில் அடைத்து விட்டு அவரை விடுதலை செய்யுங்கள்' என்றாள். விசாரணை மன்னன் முன்பாக வந்தது .அப்போது காதலனோ 'அவள் மீது எந்த தவறும் இல்லை .நான்தான் குற்றவாளி. எனக்கு தண்டனை கொடுங்கள் .அவளை விட்டு விடுங்கள்' என்றான். காதலர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் இப்படி சொன்னதால் யார் குற்றவாளி என்பதை முடிவு செய்வதில் மன்னன் தடுமாறினான். பின்னர் அமைச்சர் ஒருவரின் ஆலோசனைப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முற்பட்டான் .