கார்த்திகை தீபத் திருவிழா.. 2,668 அடி உயரத்திற்கு எடுத்துசெல்லப்படும் தீப கொப்பறை.!

கார்த்திகை தீபத் திருவிழா.. 2,668 அடி உயரத்திற்கு எடுத்துசெல்லப்படும் தீப கொப்பறை.!

Update: 2020-11-28 11:21 GMT

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்காக தீப கொப்பறை எடுத்து செல்லப்பட்டது. 
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று உலக முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வெளியூர் பக்தர்கள் முதல் உள்ளூர் பக்தர்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவில் கமிட்டியினரை தவிர மற்றவர்கள் யாரும் தீபத்தன்று அனுமதி அளிக்கப்படாது என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆட்சியர் மற்றும் கோவில் விழா கமிட்டியிடம் ஆலோசனை நடத்தினார். கொரோனா நேரத்தில் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு தடை விதிப்பது போன்ற ஆலோசனைகளும் இடம்பெற்றது.


இந்நிலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலை 4 மணியளவில் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி 6 அடி உயரமுள்ள பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதிக்கப்பட்ட தீப கொப்பறை பூஜை செய்யப்பட்டு பக்தர்களால் தூக்கிச் செல்லப்பட்டது.


மகா தீபம் ஏற்றுவதற்காக 3500 கிலோ ஆவின் நெய்யும், திரிக்கு ஆயிரம் மீட்டர் நீளமுள்ள காட்டன் துணியும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மலை உச்சிக்கு நாளை அவற்றை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி தீபம் ஏற்றப்படுவது இதுவே முதன் முறையாகும். இதனால் பக்தர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். தங்களது வீடுகளில் இருந்தவாரே தொலைக்காட்சி வாயிலாக அண்ணாமலையாரை தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

Similar News