நீரிழிவு நோயை நீக்கும் நீலகண்டன் ஆலயம்! ஆச்சர்யமூட்டும் கரும்பேஸ்வர்!

Update: 2022-06-23 00:19 GMT

வெண்ணி கரும்பேஸ்வரர் என்பது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில் வெண்ணி எனும் இடத்தில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம். இந்த கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இங்கிருக்கும் பார்வதி அம்பாளுக்கு செளந்தரநாயகி என்று திருப்பெயர். இவ்வூரின் புராண பெயர் திருவெண்ணி என்பதாகும்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், இக்கோவிலுக்கு தல யாத்திரையாக வந்த இரு முனிவர்கள், இங்கிருக்கும் கரும்பு தனில் சிவனின் ஆற்றல் வெளிப்பட்டதால் வந்தவர்களில் ஒரு முனிவர் இக்கோவிலின் தலவிருட்சம் கரும்பு தான் என்றார். ஆனால் மற்றொரு முனிவரோ நந்தியாவர்த்தம் எனும் வெண்ணி மரத்தில் சிவனின் அருளை உணர்ந்ததால் வெண்ணி மரம் தாம் தல விருட்சம் என வாதிட்டார். இந்த பெரும் முனிவர்களின் பக்தியை மெட்சிய சிவபெருமான் இருவரின் விருப்பத்திற்கேற்ப இந்த தலத்தின் விருட்சமாக இருபெரும் மரங்களுமே இருக்கட்டும் என்று ஆசி வழங்கினார்.

மேலும் கரும்பு காட்டினுள் இக்கோவில் இருந்தமையாலும், இங்கிருக்கும் மூலவர் கரும்பு கட்டுகளை ஒன்றாக கட்டியது போன்ற வடிவத்தில் இருப்பதாலும் இவருக்கு கரும்பேஸ்வரர் என்ற திருப்பெயர் நிலைத்தது. மேலும் வெண்ணி மரத்தின் பேரில் இவ்வூர் வெண்ணியூர் என்று முன்னொரு காலத்தில் அழைக்கப்பட்டு அதுவே மருவி தற்போட்து வெண்ணி கரும்பேஸ்வரர் என்றாகியுள்ளது.

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு யாதெனில், இங்கிருக்கும் கரும்பேஸ்வரருக்கு இனிப்பினை வழங்கி வழிபட்டால் பக்தர்களின் சர்க்கரை வியாதி குணமாவதாக நம்பிக்கை. அதாவது இக்கோவிலில் சர்க்கரை நோய் குணமாக வேண்டி வரும் பக்தர்கள் சர்க்கரையையும், ரவையையும் சம அளவில் கலந்து இக்கோவில் அதை வலம் வந்து இங்கிருக்கும் எறும்புக்கு உணவாக தருகிறார்கள். இதை அறிவியல் ரீதியாக சொன்னால் இக்கோவில் இருக்கும் அமைப்பும், இடமும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு ஏதுவாக உள்ளது.

வைகாசி விசாகம், நவராத்திரி, தை பூசம், சித்ரா பெளர்ணமி போன்ற நிகழ்வுகள் பெரும் விமர்சையாக இங்கு கொண்டாடப்படுகிறது. இக்கோவின் மற்றொரு அதிசயம் பங்குனி மாதம் 2, 3, மற்றும் 4 ஆம் நாளில் சூரிய கதிர்கள் இறைவன் மீது விழுவதை பலரும் பார்த்து அதிசயக்கின்றனர்.

Tags:    

Similar News