ஜோதிடத்தில் சூரியனை குறிக்கும் அம்சமாக தங்கம் உள்ளது !

Gold Benifits.

Update: 2021-08-22 02:27 GMT

ஒரு நாள் மிக உற்சாகமானதாக இருக்கும். மறுநாள் சற்று உற்சாகம் குறைவானதாக இருக்கும். ஆனால் அந்த உற்சாக குறைவிற்கான காரணமாக நாம் ஒருபோதும் அணிந்திருக்கும் ஆபரணங்களையோ அல்லது ரத்தினங்களையோ கருத மாட்டோம். நம்முடைய பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்களின் மகுடத்தை மணி மகுடம் என்று அழைக்கிறோம்.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உலோகங்களுக்கும் ஆன்மீகத்திற்கு பெரும் தொடர்பு உண்டு. நம் முன்னோர்கள் சகல விதமான செயல்களையும் காரண காரியத்தோடே செய்தனர். உதாரணமாக, இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்தின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஏன் தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு இந்த ஈர்ப்பு. அடிப்படையில் ஆன்மீகத்தால் கட்டமைக்கப்பட்டது நம் மண். எனவே இன்று மிஞ்சியிருக்கும் தங்கத்தின் மீதான பிரியத்திற்கு பின்பு நிச்சயம் ஒரு ஆன்மீக பிணைப்பு இருக்க வேண்டும். அந்த ஆன்மீக பயன்பாடுகள் காலவோட்டத்தில் வழக்கொழிந்து இன்று வெறும் உலோகத்தின் மீதான பற்று மட்டுமே எஞ்சியிருக்கலாம்.

உதாரணமாக, ஏன் கிரீடங்களில் தங்கத்தை, நவரத்தினங்களை வைக்க வேண்டும். காரணம் அந்த தங்கம் மற்றும் இதர நவமணிகள் அந்த அரசர்களிடம் இருந்த ஆன்மீக ஞானத்தை, அறம் சார்ந்த அறிவை குறிப்பதாக அமைந்திருந்தது. அதிலும் முக்கியமாக தங்கம் என்பது உடல் ஆரோக்கியம், மற்றும் பொருள் வளத்தை தூண்டும் உலோகமாக இருக்கிறது. உலகின் அனைத்து கலாச்சாரங்களாலும் மதிக்கப்படும் உலோகமாக இருக்கிறது. உளவியல் ரீதியாக தங்கம் ஒருவரின் மன திடத்தை உறுதி செய்வதாக இருக்கிறது. ஜோதிடத்தில் சூரியனை குறிக்கும் அம்சமாக தங்கம் உள்ளது.

தங்கத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பெருமளவு சம்மந்தம் உண்டு. பிறந்த குழந்தைகளுக்கு கூட சிறிய தங்க பட்டையை வசம்பு போன்ற மூலிகை பொருட்களுடன் உரையச்செய்து உரை மருந்து என கொடுக்கும் சடங்கு இன்றும் உள்ளது. உடலில் உள்ள ஐம்புலன்களில் நெருப்பினை தூண்டும் உலோகமாக தங்கம் இருக்கிறது.

ஆன்மீக சாதனாவில் இருப்பவர்கள் முக்தியை நோக்கி செல்லும் போது உலோகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. குறிப்பிட்ட சில உலோகங்கள் தேவயான ஆற்றலை ஈர்ப்பதாக அமைகிறது. அந்த வகையில் தங்கம் என்பது சஹஸ்ரார சக்ரத்தை தூண்டுவதாக உள்ளது. இதன் மூலம் ஒருவர் பிரபஞ்சத்தின் நல் ஆற்றலை, நல்ல ஞானத்தை ஈர்க்கும் தன்மையை பெருவார். அதனால் தான் அரசர்கள் தங்களில் மணிமுடியை தங்கத்தால் செய்து அதனை ரத்தினங்களால் அலங்கரித்தனர்.

Image : Unsplash

Tags:    

Similar News