செல்வம் பெருக்கும் குபேர லிங்கம்!

திருச்சிக்கு அருகில் இருக்கும் ஜம்முகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் நுழைந்ததும் எதிரே குபேர லிங்க கோயிலை காணலாம்.

Update: 2023-11-13 04:45 GMT

இந்த கோயிலின் புராணகதை பற்றி காணும் பொழுது இந்த கோவிலில் உள்ள லிங்கத்தை மகாலட்சுமியிடமிருந்து குபேரன் பெற்றதாக புராணம் கூறுகிறது. தன்னிடம் இருக்கும் சங்நிதி, பதுமநிதி நிதி ஆகிய பொக்கிஷங்கள் தன்னை விட்டு நீங்காதிருக்க சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தான் குபேரன். அவன் முன் தோன்றிய ஈசன் குபேரா உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமி அருள் வேண்டும். எனவே நீ மகாலட்சுமி நோக்கி தவம் செய். அன்னையிடம் சுயம்புலிங்கங்கள் உள்ளன. அவள் விரும்பினால் அவற்றில் ஒரு லிங்கம் உனக்கு கிட்டும் என்று அருளினார்.


ஆனால் தன்னிடம் அனைத்து செல்வங்களும் நிலைத்து நிற்க வேண்டும் மகாவிஷ்ணுவின் மார்பில் தான் நிரந்தரமாக உறைந்திருக்க வேண்டும் என்று அந்த மகாலட்சுமி ஏற்கனவே சிவபெருமானிடம் பிரார்த்தனை புரிந்தாள் அவள் வழிபட ஏதுவாக சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி அருள்புரிந்தார். அவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவள் கூறியதன் பேரில் அவர் சுயம்புவாக எழுந்தருளிய லிங்கங்கள் பல மகாலட்சுமியிடம் இருந்தன.


சிவபெருமான் அருவுறுத்தியது போல குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவம் மேற்கொண்டான். அவன் தவத்தினை போற்றிய மகாலட்சுமி அவன் விரும்பியபடி ஒரு சுயம்பு லிங்கத்தை அளித்தாள். அதனை நூலகத்தில் தகுந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள்.அவனுடைய நிதிகள் அவனிடமே நிலைத்து நிற்கும் என்று அருளினார். எங்கு பிரதிஷ்டை செய்வது என்று குபேரன் குழம்பி கொண்டு இருக்கையில் அதற்கான வழியும் சொன்னாள்  மகாலட்சுமி.


பூலோகத்தில் இரண்டு பக்கமும் நீர் சூழ்ந்த ஒரு திருத்தலத்தில் அன்னை பார்வதி இறைவனை நீரினால் உருவாக்கி வழிபட்ட லிங்கம் உள்ளது. அதுவே இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்ய தகுந்த திருத்தலம் என்று தெரிவித்தார். அதன்படி அந்த அற்புத சுயம்பு மூர்த்தியை நீர்த்தலமான திருவானைக்காவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறுகள் பெற்றான் குபேரன். திருவானைக்கா திருத்தலத்தில் கிழக்கு நோக்கி அருள் புரியவும் குபேர லிங்கத்தினை வெள்ளி மற்றும் பௌர்ணமி நாட்களில் சுக்கிர ஓரையில் புனித நீரால் அபிஷேகம் செய்து வெண்பட்டாடை சமர்ப்பித்து வெண்பொங்கல் நிவேதனம் செய்து மணமிக்க வெள்ளை மலர்கள் சூட்டி வழிபட்ட பின் அந்த பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு தானமாக அளித்து வந்தால் வறுமை நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. குறிப்பாக தீபாவளி திருநாள் குபேர லிங்கத்தின் வழிபட தகுந்த நாளாக கருதப்படுகிறது.

Similar News