வீட்டுக்கு லட்டு.. ரூ.5,000.. போலி இணையதளத்தை நம்பாதீர்கள்.. திருப்பதி தேவஸ்தானம்.!

வீட்டுக்கு லட்டு.. ரூ.5,000.. போலி இணையதளத்தை நம்பாதீர்கள்.. திருப்பதி தேவஸ்தானம்.!

Update: 2020-12-11 15:09 GMT

ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டை வீட்டுக்கே அனுப்புவதாகக்கூறி விளம்பரப்படுத்திய போலி இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. திருப்பதி லட்டுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தினால், பயனாளர்களின் வீட்டு முகவரிக்கே திருப்பதி லட்டு அனுப்பி வைக்கப்படும் என்று இணையதளம் ஒன்று விளம்பரம் செய்து வருகிறது. இது பற்றிய தகவல் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தி போலி இணையதளம் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் தங்களது இணையதள குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தது.

இதனையடுத்து அந்த போலி இணையதளத்தை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், போலி இணையதளத்தில் ஒரு முறை ஒரு லட்டை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்க ரூ.500 என்றும், ஒருவர் ரூ.5,000 செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்டுக்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ரூ.9,000 செலுத்தினால் 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் தலா இரண்டு லட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது.

மேலும் பல சலுகைகளை அந்த இணையதளம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து யாரும் ஏமாறமல் இருப்பதற்காக https://balajiprasdam.com/ என்ற இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. இது போன்ற விளம்பரங்களை நம்பாதிர்கள் என பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
 

Similar News