இலட்சுமி தேவியை கோபத்தில் ஆழ்த்த கூடிய விஷயங்கள் உண்டு !
மரியாதை குறைவாக மனிதர்களை நடத்துபவர்கள், பெண்களை துன்புறுத்துவர்களிடம் இலட்சுமி தேவி தங்குவதில்லை.
நம்முடைய புராணங்களின் படி சமுத்திரத்தை கடைந்த போது பல பொருட்கள் வெளிவந்தன. அதில் சில முக்கியமான தெய்வங்களும் அடங்கும். அதில் குறிப்பிடத்தகவர் மஹா லட்சுமி. தேவர்கள் உட்பட அனைத்து கடவுள்களின் செல்வமும் சூரையாடப்பட்ட போது, தேவி இலட்சுமி தான் அனைவரையும் காப்பாற்றினார். இந்திரனின் பக்தியின் மெச்சிய லட்சுமி தேவி இந்திரனுக்கு துவாதசாக்சார் மந்திரத்தை கொடுத்து அருளினார். இதன் மூலம் ஒருவர் இழந்த செல்வம், ஐஸ்வர்யம், புகழ், மன அமைதி என அனைத்தும் மீண்டும் கிடைக்கும்.
யாரொருவரும் இந்த மந்திரத்தை ஒவ்வொரு வெள்ளி இரவும் மஹா லட்சுமியை நினைத்து பாராயணம் செய்தால், அவருக்கு இலட்சுமியின் அருள் கிடைப்பதோடு குபேரரின் அருளும் சேர்த்து கிடைக்கும். ஆனால் இலட்சுமி தேவியை கோபத்தில் ஆழ்த்த கூடிய ஐந்து விஷயங்கள் உண்டு.
எப்போதெல்லாம் தர்மத்தையும் நல்ல கர்மத்தையும் ஆசை கடந்து செல்கிறதோ அங்கே இலட்சுமி தங்க மாட்டார். ஒருவர் வாழ்வின் முக்கிய அரம் பிறழ்வதை இலட்சுமி தேவி ஒருபோதும் ஏற்க மாட்டார். எங்கு ஒரு மனிதர் அறியாமையாலோ அல்லது ஆணவத்தாலோ தன்னிலை மறக்கிறாரோ அங்கே இலட்சுமி தேவி தங்க மாட்டார்.
அடுத்து பேராசை இருக்கும் இடத்தில் பொறாமை இருக்கும் இடத்தில் இலட்சுமி தேவி தங்குவதில்லை. அடுத்து மக்களை, விலங்குகளை துன்புறுத்துவரை கண்டால் இலட்சுமி தேவி விருப்பம் கொள்வதில்லை.
மரியாதை குறைவாக மனிதர்களை நடத்துபவர்கள், பெண்களை துன்புறுத்துவர்களிடம் இலட்சுமி தேவி தங்குவதில்லை.
இந்த அனைத்தையும் ஒரு முறை ஆராய்ந்து பார்த்தால் அறம் சார்ந்த வாழ்க்கையிலிருந்து எப்போது மனிதர்கள் தவறுகிறார்களோ அங்கே இலட்சுமி இருப்பதில்லை என்பது திண்ணமாக உள்ளது. இருப்பினும் இது போன்ற தவறான அணுகுமுறை இருப்பவர்களிடம் பணம் இருக்கிறதே என்று நாம் நினைத்தால். அவர்களிடம் இருக்கும் பணமானது தற்காலிகமானதாக இருக்கலாம். அல்லது அவர்கள் இந்த பிறவியில் செய்த பாவங்களின் பயனை அவர்களின் வரும் தலைமுறையினர் அனுபவிக்கலாம்.
மற்றும் தவறான வழியில் ஈட்டிய பணம் நெடுங்காலம் நிலைக்காது எனவும் சொல்லப்படுகிறது. நெறியான வாழ்வு, நல்லதையே நினைக்கிற மனம் அனைவரையும் அன்புடன் ஆதரிக்கிற மனம் இருந்தால் இலட்சுமி தேவி நிச்சயம் அனைத்து இடங்களிலும் வாசம் செய்வார்.
Image : Pinterest