திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட தீபத் திருவிழா.!

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட தீபத் திருவிழா.!

Update: 2020-11-20 10:39 GMT

கொரோனா தொற்றுக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் விழாக்கள் தொடங்கப்பட்டுள்ளது. சில கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில கோவில்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி அனைவரும் கடைப்படிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழா தொடர்ந்து 10 நாட்களுக்கு இரவும், பகலும் நடைபெறுகிறது. பத்தாம் நாளான வரும் 29ம் தேதி காலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் அன்று பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தீபம் அன்று பக்தர்கள் கிரிவலம் செல்லவும், மலை ஏறவும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News