மாலையில் நகம் வெட்டக்கூடாது! ஏன்? தர்கரீதியான ஆச்சர்ய காரணங்கள்!

Update: 2021-03-04 00:30 GMT

நகம் வெட்டுதல் நல்ல பழக்கம். நகங்களின் இடுக்களில் அழுக்கு தங்காமல் இருக்கவும், அந்த அழுக்கு நாம் உண்ணும் உணவில், நம் சுவாசத்தில் கலக்காமல் இருக்கவும் இந்த பழக்கம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் இந்தியா போன்ற ஆன்மீகம் வேறூன்றிய பூமியில் காலங்காலமாக ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது, விளக்கு வைக்கு வேளையில் அல்லது மாலை நேரத்தில் நகங்களை வெட்டக்கூடாது என்கிற வழக்கம் உண்டு.


இதை மூட நம்பிக்கை என்று அடையாளப்படுத்தி விடலாமா?

மூட நம்பிக்கை என்பதன் பொருள் எந்தவித அடிப்படை உண்மையும் இல்லாமல், எந்தவித அர்த்தமும் இன்றி ஒரு விஷயம் தொன்று தொட்டு செய்யப்படுகிறது எனில் அதை மூட நம்பிக்கை எனலாம். ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு மார்கமும், தங்களுக்கென பலவிதமான மூட நம்பிக்கைகளை வைத்திருக்கின்றன.. ஆனால் இதிலிருக்கும் சிக்கல் என்னவென்றால், நவீனம் என்ற பெயரில் நாம் பல நல்ல அறிவுரைகளையும் ஒதுக்கி விடுகிறோம்.

பல அர்த்தமுள்ள பழக்கவழக்கங்களை தவறாக மூடநம்பிக்கை என முத்திரையிட்டு அவற்றை புறந்தள்ளுகிறோம். எனவே மாலையில் நகத்தை வெட்டுவது என்பது மூடநம்பிக்கையா ?


காரணம் – 1

அந்த காலத்தில் போதிய மின்சார வசதி இருக்கவில்லை. அப்போது மாலை நேரத்தில் இருட்டிய பின் நகம் வெட்டுவதால், நகத்துணுக்குகளை முறையாக அப்புறப்படுத்த முடியாது. அது உணவில் கலக்கும் அபாயம் உண்டு மேலும், நகத்துணுக்குகள் ஆரோக்கியமற்றது.

காரணம் – 2

மேலும் முந்தைய காலத்தில் போதிய நகம் வெட்டும் உபகரணங்கள் இருந்திருக்கவில்லை. பெரும்பாலும் கத்தி அல்லது கூர்மையான பொருட்களை கொண்டே நகம் வெட்டப்பட்டது இரவில் போதிய வெளிச்சம் இன்றி வெட்டுகிற போது அது விரல்களை காயப்படுத்தக்கூடும் என்பதாலும் சொல்லப்பட்டது.

காரணம் – 3

இதற்கு பின்னிருக்கும் மற்றொரு மரபு சார்ந்த காரணம், மாலை நேரம் என்பது மகாலட்சுமி வீட்டிற்க்குள் வருகிற நேரம். பொதுவாக இந்த புண்ணிய காலத்திலேயே, லட்சுமி கடாக்‌ஷமும், லட்சுமி அருளும் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. அந்த வேளையில் வீட்டின் குப்பைகளை அகற்றுவது, முடியை வீசுவது, நகங்களை வெட்டுவது, யாருக்கேனும் கடன் கொடுப்பது போன்ற விஷயங்களை செய்ய வேண்டாம் என அறிவுருத்தப்பட்டது.

காரணம் – 4

பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளின் வேலைகளுக்கு நகம் ஒரு முக்கிய காரணியாக கருத்தப்படுகிறது. எனவே நகங்களை மாலையில் வெட்ட வேண்டாம் என சொல்லப்பட்டது.

Tags:    

Similar News