மகத்துவம் மிகுந்த பிரதோஷம்!

பிரதோஷம் என்றால் மாலையில் சூரிய அஸ்தமன வேளையான மூன்றே முக்கால் நாழிகைகளை குறிக்கும்.

Update: 2024-04-26 09:30 GMT

பிரதோஷ விரதம் என்பது ஈசனை வழிபாடு செய்யக்கூடிய மிகச்சிறந்த விரதம் ஆகும். மாதத்தில் வளர்பிறை , தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களில் வரும் திரையோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் வழிபாடு செய்வது மிகுந்த பலன்களைத் தரும். மாதம் இருமுறை வரும் பிரதோஷ நாட்களில் வழிபட முடியாதவர்கள் ஓர் ஆண்டில் அபூர்வமாக வரும் சனிக்கிழமை பிரதோஷத்தன்று வழிபாடு செய்வது அவசியம் .ஒரு சனி பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

அதனால் தான் அதை பிரதோஷங்களின் தலைவன் எனும் விதமாக மகாபிரதோஷம் என்று அழைக்கிறார்கள். முதன் முதலில் ஈசன் பிரதோஷ வேளையில் ஆனந்த நடனமிட்டது ஒரு சனிக்கிழமையில் தான் .சனி பிரதோஷ வேளையில் சகல தேவர்களும் ஈசனின் சன்னதியில் தான் கூடியிருப்பார்கள். ஈசனை தேவர்கள் வழிபாடு செய்வார்கள் என்பதால் அந்த வேளையில் ஈசனும் அவரின் வாகனமான நந்தியும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். அப்போது கேட்கும் வரங்களை எல்லாம் ஈசன் அருள்வார் என்கிறது ஞான நூல்கள்.

மேலும் காரியத்தடை நீங்க, கடன் இருந்து செல்வ வளம் சேர்த்தல் பகை அணிந்து வெற்றிகள் குவிதல் என இந்த உலகில் நாம் மகிழ்வோடு வாழ தேவையான அனைத்தையும் நமக்கு அருளும் வழிபாடு மகா பிரதோஷ வழிபாடு மகா பிரதோஷத்தன்று சிவாலய தரிசனம் மிகவும் முக்கியம். ஈசன் ஆனந்த நடனம் புரியும் தன்மையில் அருள்வார் தவறாமல் கோவிலுக்கு சென்று நந்திக்கு பின் நின்று அதன் கொம்புகளின் வழியாக ஈசனை தரிசனம் செய்ய வேண்டும்.

ஆலயம் செல்லும் போது குறைந்தபட்சம் கையில் மலர்களோ வில்வ இலைகளோ கொண்டு செல்லுங்கள். ஏக வில்வம் சிவார்ப்பணம் என்பது பெரியவர்கள் வாக்கு. பக்தியோடு ஒரு வில்வ இலை சமர்ப்பித்தாலே ஈசன் மனம் மகிழ்ந்து கேட்ட வரம் தருவார் .தவறாமல் திருமுறைகளை பாராயணம் செய்ய வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.

மகா பிரதோஷ காலத்தில் ஒரு முறை பாராயணம் செய்தாலே பல நூறு முறை பாராயணம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும். குறிப்பாக பிரதோஷ வேளையில் உறங்க கூடாது அதிலும் சனி மகா பிரதோஷ வேளையில் உறங்குவது பாவம் .இரவு வேலை செய்பவராக இருந்தால் கூட இந்த வேலையில் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு விழித்திருந்து சிவதியானம் செய்தாலே புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். வழிபாடு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை பிற தீய பழக்கங்களை மேற்கொள்ளக்கூடாது. தீய சொற்களை பேசக்கூடாது .நற்செயல்கள் செய்பவர்களை பழித்து பேசுதல் கூடாது என்கிறது ஞான நூல்கள்.



Similar News