மகா சிவராத்திரியின் விரத பலன்!

பாவங்களைப் போக்கும் மகாசிவராத்திரியின் பலன்களை பற்றியும் விரத முறை பற்றியும் காண்போம்.

Update: 2024-03-08 17:00 GMT

முன்பொரு சமயம் வேதங்கள் நன்றாக கற்ற ஒரு அந்தணர் அவர் இல்லத்தில் கிளிகள் வளர்த்து வந்தார். கூண்டில் அடைத்து கிளி வளர்த்த தோஷத்தாலும் அதன் மேல் உள்ள பற்றாலும் இறக்கும் பொழுது கிளிகளின் நினைவாகவே இறந்தார். மறு ஜென்மத்தில் அவர் வேடனாக பிறந்து காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். ஒருமுறை காட்டில் வேட்டையாட சென்ற போது வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.எனவே விலங்குகளை தேடிச்சென்று நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றார்.


இருள் சூழும் நேரம் ஆகிவிட்டதால் காட்டிவிட்டு வெளியேற முடியவில்லை. அப்போது தாகம் எடுக்க வில் அம்புகளை தரையில் வைத்துவிட்டு ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கினான் .அந்த வேலையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப் போன வேடன் வில் அம்புகளை எடுக்க முடியாமல் அவசரமாக ஓடி பக்கத்தில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான்.இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது. வேடனுக்கு கை கால் எல்லாம் நடுக்கமாக இருந்தது. பசியால் தலை சுற்றியது எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளையே பற்றியபடி இருந்தான்.


மறுநாள் பொழுது விடிந்ததும் கீழே பார்த்தபோது புலி அங்கே இல்லை. இதை அடுத்து வேடன் கீழே இறங்கி வந்தான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயதுமுதிர்ச்சியால் இறந்தான்.அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது.அங்கே எமனிடம் "இந்த வேடனின் வாழ்வில் பாவங்கள் எதுவும் இல்லை" என்று சித்திரகுப்தன் கூறினான். தன் வாழ்நாளில் பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாவ கணக்கில் எதுவும் இல்லை என்றது, எமனுக்கு அதிர்ச்சியை அளித்தது பேரில் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க ,முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது. வில்வமரம் ஆகும். அன்றைய தினம் மகாசிவராத்திரி.


பயத்தில் கைகள் நடுங்க கிளைகளை பற்றி இருந்ததால் அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன. வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்து இருந்தது. அந்த சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகள் விழுந்தன .மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல் வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும் சித்திரை குத்தனும் அறிந்தனர்.



வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை கூட போக்கும் தன்மை கொண்டது மகா சிவராத்திரி வழிபாடு. மகாசிவராத்திரி அன்று உபவாசம் இருத்தல் பூஜை செய்வது, தூங்காது இருத்தல் ஆகியவை முக்கியமானவை. சிவராத்திரி அன்று உணவு தவிர்க்க முடியாதவர்கள் ,பால்,பழம் வேகவைத்த பொருள் சாப்பிட்டு உபவாசம் இருக்கலாம் .பகலிலும் இரவிலும் தூங்காமல் இருப்பது புண்ணியத்தை தரும். சிவலிங்கத்தை பூஜிப்பது சுவாமியை சிவாலயம் சென்று தரிசிப்பது மிக விசேஷமானது .எட்டாம் தேதி மாலை 6 மணி தொடங்கி 9ஆம் தேதி காலை 6 மணி வரை சிவராத்திரி தரிசனம்.அன்றைய தினம் அன்றைய தினம் இரவு கண் முழிப்பது மிக அவசியம்.விளக்கேற்றுவதும் அபிஷேக பொருட்கள் கொடுப்பது மிகுந்த புண்ணியத்தை தரும்.

Similar News