செல்வம் பெருக பத்ம புராணம் சொல்லும் மஹாலட்சுமி பூஜை வழிமுறைகள்.!

செல்வம் பெருக பத்ம புராணம் சொல்லும் மஹாலட்சுமி பூஜை வழிமுறைகள்.!

Update: 2020-12-17 05:45 GMT

இந்து மார்கத்தின் மகத்துவமான 18 புராணங்களுள் முக்கியமானதாக கருதப்படுவது, பத்ம புராணம். இது பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டது. இந்த மூல புராணம், காலத்தின் மாற்றத்தால் பல்வேறு விதமாக உருமாற்றம்ம் கண்டுள்ளது. இதில் 55,000 மேற்பட்ட பாடல்களை கொண்டது. இதில் புராணம், பூவியியல் வானவியல் நதிகள், புனித இடங்கள் என ஏராளமான விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

ராஜஸ்தானில் உள்ள புஸ்கர் பகுதியில் அமைந்துள்ள பிரம்மா கோவில் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிவன், விஷ்ணு வழிபாடு மற்றும் முக்திக்கான வழி, யோக முறைகள் போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மஹா லட்சுமி வழிபாடு குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளது. செளந்தர்யம், செளபாக்கியம், நல்ல அதிர்ஷ்டம் போன்றவற்றின் அதிபதி இவர். இவரை வணங்குவதற்கான வழிமுறைகள் குறித்து பத்ம புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பத்ம புராணத்தின் படி, பெளர்ணமியின் அதிகாலையில் அரச மரத்தில் மஹாலட்சுமி வீற்றிருப்பதாக ஐதீகம். எனவே பொருளாதார மேன்மைக்கான வழிபாட்டில் இருப்போர், அரச மரத்தினை பெளர்ணமி நாளின் அதிகாலையில் வணங்கி வரவேண்டும். மற்றும் சனிக்கிழமை தோறும் பால், வெல்லம், போன்றவற்றை அரச மரத்திற்கு அர்பணித்து தீபம் ஏற்றி வழிபட்டால் மஹாலட்சுமியின்  அருளை பரிபூரணமாக பெற முடியும்.

அடுத்ததாக வியாழக்கிழமை தோறும் வாழை மரத்திற்கு  கங்கா நீரை அர்பணித்து நெய்தீபம் ஏற்றி வர இலட்சுமி தேவியின் அருளை பெற முடியும். புதன்கிழமை இரவு வேளையில் மஹா லட்சுமியை வணங்கி வழிபடுவது உகந்ததாகும் இந்த பூஜையை கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு செய்வது சிறந்ததாகும். ஶ்ரீ லட்சுமி யந்திரம் வைத்திருப்பவர்கள் கோலம் வரைந்து ஆசனம் அமைத்து அதில் வைக்கலாம். யந்திரம் இல்லாதவர்கள் முறையான குருமார்களின் வழிகாட்டுதலுடன் புனித இலையிலோ அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்ட காகிதத்திலோ யந்திரத்தை வரைந்து பூஜையில் வைக்கலாம்.

இலட்சுமியின் திருவுருவத்திற்கும் அல்லது வைக்கப்பட்ட யந்திரத்திற்கோ நெய், தேன், பால், சர்க்கரை போன்றவற்றை அர்பணித்து வழங்கலாம். இந்த யந்திர பூஜைக்கென பிரத்யேக மந்திரங்கள் புராணத்தில் வழங்கப்பட்டுள்ளன அதை பாராயணம் செய்து பூஜித்து வர அனைத்து செளபாக்கியங்களும் கிட்டும்.

Similar News