சிவனுக்கு பால் அர்பணிப்பதால் ஏற்படும் ஆச்சர்ய நன்மைகள் !

Update: 2021-11-12 00:30 GMT

வழிபாடுகளிலே மிகவும் சிறப்பான வழிபாடு சிவ வழிபாடு. அதுவும் லிங்கத்தை வழிபடுவதென்பது மிகவும் புனிதமானதாக பரிசுத்தமானதாக கருதப்படுகிறது. காரணம் சிவபெருமான் கடவுளுக்கெல்லாம் கடவுள் என்பதாலேயே மஹாதேவன் எனவும் அழைக்கப்படுகிறார். ஆன்மா கர்ம வினைகளிலிருந்து விடுபடுவதற்கு சிவ வழிபாடே மிகவும் உகந்தது.

சிவனுக்கு நீராலும், பாலாலும் அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் அதை காட்டிலும் சில சிறப்பு அபிஷேகங்கள் நாம் சந்திக்கும் கடுமையான சவால்களில் இருந்து நம்மை காக்க உதவும். அந்த சிறப்பு அபிஷேகங்கள் யாதெனில், ஒரு சில இடங்களில் கரும்பு சாரினால் சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதற்கான காரணம், பொருளாதார ரீதியான பிரச்சனைகள் நீங்க வேண்டுமெனில், கரும்பு சாரினால் அபிஷேகம் செய்வது நன்மை தரும் என சொல்லப்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் மேம்படவும், ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும் சிவ லிங்கத்திற்கு தேனால் அபிஷேகம் செய்தால் நல்ல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி மிகவும் குறிப்பாக நம் குழந்தைகளின் உடல் நலத்திற்கும் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பிரார்த்திக்கிற போது சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்கின்றனர் ஆன்மீக பெரியோர்கள்.

வேதங்களின் படி, சிவலிங்கத்திற்கு எண்ணை காப்பு சாற்றுவது மிகவும் நல்ல விதமான பலன்களை நமக்கு அளிக்கும். சிவபெருமான் கர்ம வினைகளில் இருந்து முக்தி அளிப்பவர். எனவே ஒருவர் செய்யக்கூடிய வழிபாட்டின் இறுதி நிலை என்பது முக்தியை அடைவதே ஆகும். உலக இன்பங்களில் இருந்து விடுபட்டு துன்பம் எனும் பெருங்கடலில் இருந்து மீண்டும் இறைவனை அடையும் பாதையில் நம் ஆன்ம சுத்தம் என்பது மிகவும் அவசியம். பால் மற்றும் கங்கை நீர் இந்த இரண்டு புனித பொருட்களாலும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்கிற போது ஒருவரின் ஆன்மா சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்படுதல் என்றால் தீய எண்ணங்களில் இருந்து விடுதலை பெறுகிறது. எதிர்மறையான ஆற்றலில் இருந்து நம்மை காக்கிறது.

இந்த கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனுக்கு மிக உகந்த நாளாக கருதப்படுவதால். சோமாவார விரதமிருந்து சிவனுக்கு பாலை அர்பணம் செய்து அபிஷேகம் செய்து வழிபடுவதால் ஒருவரின் மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகிய மூன்று நிலைகளிலும் புத்துணர்வை பெறுவார் என்பது திண்ணம்.

Image : Pinterest

Tags:    

Similar News