மந்திர உச்சரிப்பில் கவனம் தேவை! ஒலியின் அதிர்வை பொறுத்தே பலன்கள் அமையும்

Update: 2021-04-27 00:30 GMT

ஹிந்து மதத்தில் மந்திரங்கள் என்பது மிக வலிமை கொண்டது ஆகும். மந்திரங்கள் என்பது பெரும்பாலும் சமஸ்க்ரித மொழியில் இருந்து வந்ததே. இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது நமது உடலுக்கும் மனதிற்கும் அபிரிமிதமான சக்தி கிடைக்கும். இந்த மந்திரங்கள் என்பவை குறிப்பிட்ட ஒலி அலைகளின் கூட்டு கலவையாகும்

. நூற்றுக்கணக்கான இதுபோன்ற ஒலி அலைகள் வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கின்றன, இந்த மந்திரங்கள் எல்லாம் வேதங்களில் சொல்லப்படுத்திருக்கின்றன. சமஸ்க்ரிதம் என்பது தேவ பாஷை என்று சொல்லப்படுகிறது, அதாவது தேவர்களை வசீகரிக்கும் தன்மை இந்த சமஸ்க்ரிதத்திற்கு உண்டு, இதன் ஒவொவொரு வார்த்தைகளையும் உச்சரிக்கும் போது எழுகின்ற சப்த அலைகள் அபிரிமிதமான சக்தியை கொண்டதாக இருக்கிறது



இந்த மந்திரங்களை முறையாக உச்சரிக்க கற்றுக்கொள்வதற்க்கே சிறுவயதில் இருந்து பயிற்சி பெற வேண்டியது அவசியமாகும். இந்த மந்திரங்களை சரியாக உச்சரிப்பது மட்டுமல்ல, இதை உச்சரிப்பவர்கள் உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியமாகும்.

இந்த மந்திரங்களை சொல்லும்போது அமரும் முறை அணியும் உடை, எந்த வகையில் உச்சரிக்கிறோம், மனம் அந்த மந்திரங்களில் லயித்திருக்கிறதா என்பதெல்லாம் மிக மிக முக்கியமானதாகும். இதில் சிறிய பிழை நேர்ந்தாலும் மந்திரத்தின் பலன் எதிர்மறையாக போய்விடும் வாய்ப்பு உள்ளது. இதை பயிற்சி செய்து தேர்ச்சி பெறுவதர்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். இப்போதெல்லாம் மந்திரங்கள் புத்தகங்களில் அச்சிட்டு வந்து விட்டன ஆனால் அது முறையல்ல.


மந்திரங்கள் என்பவை கேட்கப்பட்டு பிறகு அதை போல உச்சரிக்கப்படவேண்டும் இந்து மதத்தில் ஓம் எனும் மந்திரம் மந்திரங்களில் முதன்மையாக வருகிகிறது. எல்லா மந்திரங்களும் ஓம் என்ற ஒலியில் இருந்தே ஆரம்பிக்கின்றன. இந்த ஓம் எனும் மந்திரத்தை பிரணவ மந்திரம் என்று கூறுவார்கள். பிரபஞ்சத்தின் முதல் ஒலி இந்த ஓம் தான் என்றும் கூறுகிறார்கள். இந்த மந்திரத்தை நாம் சப்தமாக உச்சரிப்பது மிக பெரியிற் நன்மைகளை தரும்.

உடலில் உள்ள மன இறுக்கம், நோய்கள் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு. சப்தமாக இந்த மத்திரத்தை சொல்ல சொல்ல நாளடைவில் அது நம் உடலில் அதிர்வுகளாக மாறி நம்மை உடல் மற்றும் மன நலத்திற்கும் ஆன்ம விடுதலைக்கும் அழைத்து செல்லும் என்பது உண்மை.

Tags:    

Similar News