பிரம்ம முஹூர்த்தம் என்பது சூரியன் உதிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பான நேரம். இந்த நேரம் ஆன்மீக வளர்ச்சிக்கும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த பிரம்ம முகூர்த்தத்தை பற்றி ஆயுர்வேத நூல்களில் நிறைய ஸ்லோகங்கள் வருகின்றன, நீண்ட ஆயுள் செல்வம் போன்ற வெற்றிக்கு இந்த ப்ரம்ம முஹூர்த்தம் எப்படி உதவி செய்கிறது என்று அந்நூல்கள் கூறுகின்றன.
அஸ்தங்க ஹரிதயம் எனும் நூல் ஒருவர் நோயற்ற உடலுடன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றால் அவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திரிக்க வேண்டும் என்று கூறுகிறது. சூரியன் உதிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னாள் மிக சக்தி வாய்ந்த காந்த அலை பிரவாகம் பூமியை சூழ்ந்து கொள்கிறது, இந்த சக்தி மனிதனுக்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அமைதியும் தருகிறது. இந்த அதிகாலை சூழ்நிலை மிக சக்திவாய்ந்ததாகவும் அமைதியாகவும் இருப்பதால் தியானம் செய்வதற்கு ஏற்றதாகவும் அமைகிறது. இந்த நேரத்தில் செய்யும் தியானம் மனிதனின் மனதில் உள்ள குழப்பங்களையும் அமைதியற்ற தன்மையுயும் நீக்கி சத்வ குணத்தை தருகிறது. இந்த நேரத்தில் சுற்றுப்புற சூழலின் மாசு குறைந்து கிறுக்கும் அதே நேரத்தில் பிராண சக்தி மிக அதிகமாக இருக்கும்
அதிகாலை நேர உடற்பயிற்ச்சி உடலுக்கு பல நன்மைகளை தரும், பிராணாயாமம் யோகா, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் நடை அல்லது ஓடுதல் போன்ற பயிற்சிகளை இந்த நேரத்தில் செய்வதால் அந்த நாள் முழுக்க உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். மனதில் ஒரு வித ஆனந்தம் ஏற்படும். இந்த நேரத்தில் தூங்குபவர்கள் வாழ்வு எப்போதும் சோம்பலாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருப்பதாய் நாம் காண முடியும் . மேலும் நம் சாஸ்திரங்கள் ஒரு மனிதனின் வாழ்வு அவன் எந்த நேரத்தில் எழுந்திருக்கிறான் என்பதை பொறுத்து தான் அமைகிறது என்று கூறுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி சூர்ய தேவனின் அருள் பெற்றவர்கள் எப்போதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பார்கள் அல்லது சூர்யா தேவனின் அருளை பெறவேண்டுமென்றால் ஒருவர் பிரம முகூர்த்தத்தில் எழுந்திரிக்க வேண்டும். மேலும் இந்த நேரத்தில் 45 விழுக்காடு ப்ரணவாயு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்..