மீசை உடன் அருள்பாலிக்கும் அதிசய அனுமன்

மீசையுடன் அழகான கம்பீர தோற்றத்தில் குஜராத் மாநிலத்தில் அனுமன் அருள் பாலிக்கிறார். அந்த ஆலயம் பற்றி காண்போம்.;

Update: 2023-08-02 17:30 GMT

குஜராத் மாநிலம் சலங்கூர் என்ற இடத்தில் 'காஸ்த்பஞ்சன்' அனுமன் மந்திர் என்ற பெயரில் அனுமன் கோவில் உள்ளது. இந்த அனுமனுக்கு துக்கங்களை அழிப்பவர் என்று பொருள். இந்த ஆஞ்சநேயர் எங்கும் இல்லாத தோற்றத்தில் வித்தியாசமாக காணப்படுகிறார் .


அதாவது மீசையுடன் பற்களை கடித்த படி தன் காலடியில் ஒரு பெண் அரக்கியை நசுக்கிய நிலையில் இருக்கிறார். இவரை சுற்றிலும் பழங்களை கையில் வைத்திருக்கும் வானர உதவியாளர்கள் இருப்பதுபோல் இருக்கிறது. இவர் பக்தர்களின் துன்பங்களை அகற்றுபவராக அறியப்படுகிறார்.

Similar News