நடராஜர் ஆருத்ரா தரிசனம்.. வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.!
நடராஜர் ஆருத்ரா தரிசனம்.. வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.!
சிதம்பரம் நடராஜ கோயிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெளியூர் பக்தர்களை நகரத்தின் வெளியே தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் நடராஜர், கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிலையில், டிசம்பர் 29ம் தேதி திருத்தேர் உற்சவமும், 30ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. தேரோட்டத்திற்காக ஆயிரம் நபர்களும், ஆருத்ரா தரிசனத்திற்கு ஒரே நேரத்தில் 200 நபர்களும் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.