காவிரி நடுவில் அருளும் நட்டாற்றீஸ்வரர் ஆலயம்!
காவிரி ஆற்றின் நடுவில் உள்ள குன்றில் அமைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஆலயமாக விளங்குகிறது காங்கேயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் ஆலயம்.
ஈரோடு கரூர் வழித்தடத்தில் ஈரோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் கரூரில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் சாவடிப்பாளையம் நால் ரோட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். பேருந்து மூலம் வருவோர் சாவடிப்பாளையம் இறங்கிச் செல்ல வேண்டும் .திருக்கயிலாயத்தில் சிவன் பார்வதி திருமண வைபவத்தில் பங்கேற்க தேவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திருகைலாயம் சென்றதால் பூமியின் சமநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டது. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது .
இதனை சரி செய்ய அகத்தியர் அழைத்த சிவபெருமான் தெற்கில் பொதிகை மலையில் நின்று உலகை சமப்படுத்தும்படி ஆணை இட்டார். இறைவன் இறவியின் திருமணத்தை நம்மால் பார்க்க முடியாது என்று அகத்திய தயங்கினார். அதற்கு சிவபெருமான் நீ இருக்கும் இடத்திலேயே என் திருமண காட்சியை காணும் பேரு பெறுவாயாக என்றார். அதன்படி தெற்கு நோக்கி பயணமானார் அகத்தியர் இதற்கிடையில் சூரபத்மன் கொடுமையால் சீர்காழியில் மறைந்து வாழ்ந்த தேவர்கள் போதிய நீர்வளம் இன்றி வாடினர் .இதனால் விநாயகரை வழிபட்டனர். அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள ஆற்று நீரை பூமியில் பாய வைக்க வேண்டினர்.
அதன்படி அகத்தியர் பயணம் செய்த குடகுமலை வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றினார் விநாயகர். அச்சிறுவனிடம் கமண்டலத்தை தந்த அகத்தியர் நான் சிவ வழிபாடு செய்து முடிக்கும் வரை இந்த கமண்டலத்தை தரையில் வைக்காமல் கையிலே வைத்திரு என்று கூறினார். அதற்கு அந்த சிறுவன் சரி ஆனால் ஒரு நிபந்தனை நான் நேரத்தில் வீடு செல்ல வேண்டும். நேரம் அதிகமானால் நான் தங்களை மூன்று முறை அழைப்பேன். தாங்கள் வரவில்லை என்றால் இதை தரையில் வைத்து விட்டு சென்று விடுவேன் என்றான் .அகத்தியரும் அதை ஏற்றுக்கொண்டார் .ஆனால் அகத்தியர் வழிபாட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே அவரை மூன்று முறை அழைத்துவிட்டு கமண்டலத்தை தரையில் வைத்து விட்டான் சிறுவன்.