நவராத்திரியின் இரண்டாம் நாள் – அன்னை பிரம்மச்சரினியை வணங்குவோம் !

Update: 2021-10-07 23:45 GMT

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவி ஒன்பது ரூபங்களில் வெளிப்பட்டார். இந்த ஒன்பது ரூபங்களையும் நவ துர்கை என அழைப்பதுண்டு. அந்த வகையில் முதல் நாளாக நேற்று தேவி ஷைலபுத்திரி அதாவது மலைகளின் அரசனின் மகளாக அவதரித்தார் என்றும்.

இன்று இரண்டாம் நாளில் பிரம்மசிரினியாக அவர் அருள் பாலிக்கிறார். பார்வதியின் திருமணமாக கன்னி ரூபத்தையே பிரம்மசரினி என்று வழிபடுகிறோம். இந்த ரூபத்தில் தேவி காலில் பாதணிகள் ஏதும் அணியாமல், ஒரு கையில் ஜெப மாலையும், மற்றொரு கையில் கமண்டலமும் ஏந்தியுள்ளார்.

இந்த நாளில் அதிகாலை எழுந்து, சுத்தமாக நீராடி வழிபட்டு நம் பிரார்த்தன்னைகளை அர்பணிக்கலாம். இந்த வழிபாட்டின் போது நாம் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரம் "ஆவும் தேவி பிரம்மச்சரினியை நமஹ||

இந்த இரண்டாம் நாளில் தேவியை வணங்குவதால் அதீத ஆனந்தத்தையும், ஞானத்தையும் அள்ளி வழங்குகிறாள் தேவி. புராணங்களின் படி மாதா பிரம்மச்சரினி செவ்வாயின் அதிபதியாக திகழ்கிறார் பக்தர்களுக்கு சகல விதமான அருள்களையும் அள்ளி வழங்கி பக்தர்களின் அனைத்து மன துன்பங்களியும் விலக்குபவராக இருக்கிறாள். குறிப்பாக யாருக்கேனும், மங்கல தோஷம் இருப்பின் தாய் பிரம்மச்சரினியை இரண்டாம் நாள் வழிபடுவதால் அவை நீங்கும்.

தேவி தீவிர தவத்தின் அடையாளமாகும். பல காலம் தீவிர தவத்தில் இருந்தவர் எனவே அன்னையை வணங்கி அன்னையின் அருளை பெறுவதென்பது அவரின் பெரும் தவத்தின் பலனை நாம் பெறுவதற்கு இணையானது ஆகும். வெற்றிகளுக்கு தடையாக இருக்கும் அனைத்து இடர்களும் நீங்கும். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரும் மன அமைதியை பெறுவார்கள். அதுமட்டுமின்றி செய்யக்கூடிய காரியங்கள் அனைத்திலும் பெறும் மன நிறைவு ஏற்படும். என்பது நம்பிக்கை

இந்து மரபின் படி, மங்கலம் செளபாக்கியம் என சகலத்தையும் அருளுபவராக மாதா பிரம்மச்சரினி இருக்கிறாள். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. அந்த வகையில், இரண்டாம் நாளான இந்நன்னாளில் மாதா பிரம்மச்சரினியை வணங்கி அனைத்து நல்லருளையும் பெறுவோம்

Image : Jagran.com

Similar News