அச்சம் அகற்றும் துர்காஷ்டமி எட்டாம் நாள்: மகா கெளரி பூஜை !

Update: 2021-10-13 00:00 GMT

எல்லையற்ற அருளை தரும் எட்டாம் நாள் பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாள் வழிபாடு நவராத்திரி பூஜையின் முக்கிய அம்சம் ஆகும். நவ துர்கை அம்சத்தில் முக்கிய அம்சமான மகா கெளரி வழிபாடு நடைபெறும் நாள் இன்று. இந்த நாளை துர்கா அஷ்டமி என்றும் சொல்வதுண்டு. இந்த எட்டாம் நாள் பூஜையில் பலர் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.

அன்னை மகா கெளரி ராகு கிரகத்தை ஆட்சி செய்பவர் என சொல்லப்படுவதுண்டு அன்னை எரு வாகனத்தில் பவனி வரும் காரணத்தால் அன்னைக்கு வ்ரிஷாருதா என்ற பெயரும் உண்டு. மகா கெளரி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். ஒரு கரத்தில் திரிசூலமும், மற்றொரு கரத்தில் டமருகம், மூன்றாம் கரத்தில் அபய முத்திரை மற்றும் நான்காம் கரத்தில் வரத முத்திரை ஏந்தி காட்சி தருகிறாள்.

எட்டாம் நாளில் கருநீல நிற உடை அணிவது சிறப்பு, புத்தி கூர்மை மற்றும் மன அமைதி இவையே இந்நிறத்தின் முக்கியத்துவம் ஆகும். இந்த நிறம் மகா கெளரிக்கு மிக உகந்ததாக கருதப்படுகிறது. மற்றும் அன்னைக்கு உகந்த மலர் வெள்ளி நிற மல்லிகை. இம்மலரை அர்பணித்து மந்திர உச்சாடனை செய்து அன்னையை வழிபடுவதால் ஒருவர் பூரணமான பலன்களை பெறுவர் என சொல்லப்படுகிறது.

இந்த எட்டாம் நாள் குறித்து இந்து மரபில் ஏராளமான கதைகள், நிகழ்வுகள் தொடர்புபடுத்தி சொல்லப்பட்டாலும் மிக முக்கியமானதாக கருதப்படுவது இந்த துர்காஷ்டமி நாளில் தான் அன்னை தீமை செய்து வந்த மகிஷாசுரனை வதம் செய்தார். தீமைகளை வென்று வெற்றியை நிலைநாட்டிய நாள் இன்று.. இந்த நாளில் அன்னை சற்று ஆக்ரோஷமான தோற்றத்தில் இருந்ததாகவும் அவருக்கு ஒவ்வொரு கடவுளர்களும் ஒவ்வொரு ஆயுதத்தை அளித்து அனைத்து அம்சங்களின் ஒட்டு மொத்த உருவமாகவும், மிக முக்கியமாக விஷ்ணு, பிரம்மா மற்றும் சிவனின் கலவையாக அன்னை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நாளில் சொல்ல உகந்த மந்திரம்:

"சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே|

சரண்யே த்ரியம்பகே கெளரி நாராயணி நமஸ்துதே|| "

அச்சங்களை அகற்றி, தைரியம் நிறைந்து, மன அமைதி பெருக அன்னையை வணங்கி துதிப்போம்.

 Image : Navbharat Times

Tags:    

Similar News