கோலாகலமாக தொடங்கியது திருமலை திருகுடை பிரம்மேற்சவம்

Update: 2023-09-18 03:56 GMT

 புரட்டாசி பிரம்மேற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி பிரம்மேற்சவத்தில் சமர்ப்பிக்கப்படும் 11 வெண்பட்டு குடைகளின் ஊர்வலம் இன்று கோலாகலமாக சென்னை பாரிமுனையில் இருந்து துவங்கியது

கடந்த 18 ஆண்டுகளாக ஏழுமலையானுக்கு 11 வெண்பட்டு குடைகளை திருமலை திருப்பதி பிரம்மேற்சவத்தில் தமிழக பக்தர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான திருப்பதி உபய உற்சவம் சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கியது. புரட்டாசி பிரம்மேற்சவத்தை முன்னிட்டு தொடங்கிய இந்த ஊர்வலம் சென்னையில் இருக்கக்கூடிய வடக்கு மேற்கு பகுதிகளுக்கு சென்று மதிய வேளையில் வைராகி மடத்தில் வைக்கப்பட்டு, நான்கு மணி அளவில் கௌரி தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க பட்டு துணி, மூங்கில், ஜரிகை மற்றும் சில மின்னும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட 11 குடைகள் கேசவ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த குடைகளில் ஒன்பது குடைகள் திருப்பதி திருமலை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு மீதம் இரண்டு குடைகள் மட்டுமே திருப்பதி கோவிலை அடைந்து பிரம்மேற்சவத்தில் பங்கு பெற வைத்து உற்சவருக்கு முன்னும் பின்னும் இந்த குடையை எடுத்து செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட ஆறு நாட்கள் சாலை வழியாக 11 வெண்பட்டு குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் செல்லும் வழி எங்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறும். 

Source - Dinathanthi 

Similar News