ஆடுகின்ற வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நிலையான வாழ்வைப் பெற வணங்க வேண்டிய தெய்வம்!
ஈசனின் திருக்கோலத்தில் நாம் கண்டு களித்து மகிழ வேண்டிய ஒரு திருக்கோலம் நடராஜர் திருக்கோலம்.
ஆடுகின்ற வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் யாவும் குறைந்து வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமைய நாம் வணங்க வேண்டிய தெய்வம் நடராஜ பெருமான். தில்லை நடராஜருக்கு விரதம் இருக்க இரண்டு நாட்கள் மிகவும் சிறப்பானவை. ஒன்று மார்கழி மாத திருவாதிரை நாள். மற்றொன்று ஆனித் திருமஞ்சன நாள். இந்த இரண்டு நாட்களிலும் விரதம் இருந்து சிவபெருமானை நடராஜர் கோலத்தில் தரிசித்து ஆராதனைகள் செய்து வழிபடுபவருக்கு வேண்டிய வரமெல்லாம் தந்தருள்வார் அந்த கூத்தபிரான்.
ஆற்றல் மிக்கவர்களாக உங்களை மாற்றக்கூடிய சக்தி நடராஜ பெருமானுக்கு உண்டு நடராஜர் தொடர்ந்து வழிபடுபவருக்கு வாழ்வில் சகல விதமான செல்வங்களும் வந்து சேரும். ஆனித் திருமஞ்சன நாளில் விரதம் இருந்து நடராஜபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதை கண்டு வந்தால் தடைகள் அகலும். தனலாபம் பெருகும்.