தமிழகத்தில் இந்து கோவில்கள் பெரும்பாலானவை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு வரும் வருமானங்களை எடுத்துக் கொள்வதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல், கோவில்களின் நலனில் தொடர்ச்சியான அக்கறை செலுத்த வேண்டும் என்றும், கோவில்களுக்கு வரும் பக்தர்களின் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பினர் தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி கூறும் பொழுது, "திருச்செந்தூர் கோவிலில் தேவஸ்தானத்தின் அலட்சியத்தால் பொருட்கள் ஏற்ற வந்த லாரி தூண் மீது மோதி விபத்து.. இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிர்ச்சேதம் இல்லாமல் இருப்பதற்கு அந்த முருகப்பெருமானே காரணம் என்று பக்தர்கள் பேசுகின்றனர். கனரக வாகனத்தை அனுமதித்தது இந்த விபத்துக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கோவில் நிர்வாகத்தில் கவனம் கொள்வதில்லை.
மக்களிடம் இருந்து வரக்கூடிய வருமானத்தை மட்டும் நோக்குகிறது தவிர மக்களுடைய பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதில்லை. இதைத்தான் இந்து முன்னணி வலியுறுத்துகிறது, அரசே! ஆலயத்தை விட்டு வெளியேறு.." என்று தங்களுடைய கடைசியான வாதத்தை முன்வைத்து இருந்தார்கள்.
Input & Image courtesy: News