ஐயப்ப சாமிகளை அவமானப் படுத்திய தி.மு.க.. இந்து முன்னணி மாநில தலைவர் கண்டனம்..

Update: 2023-12-04 01:07 GMT

ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்களை இப்படி திமுக நடத்துவது? இந்து மதத்திற்கு எதிரானது என்று - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்கள் கண்டன பதிவை தெரிவித்து இருக்கிறார். இது பற்றி தன்னுடைய கண்டன அறிக்கையில் அவர் கூறும் பொழுது, "நேற்று உதகையில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலையணிந்து வந்த திமுக தொண்டர்களிடம் அவர்கள் போட்டிருந்த கருப்பு துண்டை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோர் அய்யப்பனுக்கு மாலை போட்டு கழுத்தில் துண்டு போட்டிருப்பவர்கள் துண்டை கழட்டி மறைத்து வைத்துக் கொள்ளுங்கள் அமைச்சர் உதயநிதி பார்த்தால் கோபப்படுவார் என்று தொண்டர்களிடம் ஒலிப்பெருக்கியில் கூறியதாக செய்தி வருவது திமுகவின் இந்து விரோத போக்கின் உச்சமாக தெரிகிறது.

மேலும் இத்தகைய போக்கு இந்துக்களை நான்காம் தர மனிதர்களாக திமுக நடத்துவதை வெளிக்காட்டுகிறது. திமுகவின் இந்து விரோத செயல்பாடு மாறவே இல்லை. இதற்கு முன்னர் கடந்த காலத்தில் கூட முன்னாள் திமுக தலைவராக இருந்த கருணாநிதி அவர்கள் நெற்றியில் குங்குமம் வைத்து வந்த கட்சிக்காரரிடம் அது என்ன இரத்தமா? என கேலி பேசினார். இந்துக்கள் மத உணர்வை இப்படி காயப்படுத்தும் விதமாக பேசும் திமுகவின் நடவடிக்கை என்றும் கூட மாறவில்லை ஆனால் அதே திமுக தான் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் தங்களுடைய மத அடையாளங்களுடன் வரும்பொழுது அவர்களுடன் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.


ஐயப்ப பக்தர்கள் பக்தியோடு மாலை அணிந்து, கருப்பு துண்டு அணிந்து முன்வரிசையில் அமர்ந்து இருப்பதை திமுக கேவலமாக நினைப்பது திமுகவின் இழிவான மனநிலை தானே. இதுபோல் வேற்று மதத்தினரை பேசி இருந்தால் அது பெரிய பிரச்சினையாக வெடித்திருக்கும் என்பதை திமுகவிற்கு இந்துமுன்னணி சுட்டிகாட்டுகிறது. இத்தகைய அநாகரிக செயலுக்கு பொறுப்பேற்று திமுக தலைவர் இந்துக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று இந்து முன்னனி கேட்டுக் கொள்கிறது.

Input & Image courtesy:News

Tags:    

Similar News