சிதம்பரம் நடராஜர் கோயில்.. ஆக்கிரமிக்கும் எண்ணத்தை கைவிடு.. இந்து முன்னணி..

Update: 2023-12-09 01:53 GMT

சிதம்பரம் நடராஜர் கோயில் என்பது பழமையான சிவ தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. குறிப்பாக இந்த ஒரு கோவில் வரலாற்றுச் சின்னமாக மட்டுமல்லாது பல்வேறு சுற்றுலா பயணிகளும் வருகை தந்து நடராஜர் அவர்களை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தீட்சதர்கள் இந்த கோவிலில் பூங்கா போன்ற புல்வெளி தளம் அமைத்ததற்காக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துகிறது.

இது பற்றி இந்து முன்னணி கூறும் பொழுது தான், "சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி இல்லாமல் பூங்கா அமைப்பதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலயம் தீட்சிதர்களுக்கு சொந்தமானது. மேலும் இந்த ஆலயத்தை தேசிய புரதான சின்னமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


கோவில் வளாகத்தை அழகுபடுத்த புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் ஸ்ரீரங்கத்தில் புல்வெளி அமைத்துள்ள இந்து சமய அறநிலையத்துறை, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அமைத்துள்ள புல்வெளியை பூங்கா அமைப்பதாக கூறி வழக்குத் தொடர்ந்து ஆலயத்திற்குள் கொல்லைப்புறமாக வர முயற்சிக்கிறது என்று ஆன்மீகப் பெரியவர்கள் கருதுகிறார்கள். இந்த இந்து சமய அறநிலைத்துறையின் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது" என்று தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கங்களில் இது பற்றி தனது கருத்துக்களை இந்து முன்னணி அமைப்பினர் பதிவிட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News