ஜனவரி 22ஆம் தேதி அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான முக்கிய சடங்கு ஒவ்வொன்றும் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில் நேற்றைய தினம் முக்கிய சடங்குகளில் ஒன்றாக கருவறைக்குள் பால ராமர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. ஆனால் வெள்ளை துணியால் ராம் லல்லா சிலை மூடப்பட்டிருந்த படங்கள் மட்டுமே நேற்று வெளியிடப்பட்டது! இந்த நிலையில் இன்று பால ராமரின் முழு சிலை வடிவமைப்பின் படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த படங்களில் சிலை வடிவமைப்பில் உள்ள ஒவ்வொரு நுணுக்கங்களும் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் பால ராமரை பார்த்த பக்தர்கள் அனைவரும் பரவசமடைந்தனர்! பிரமிக்க வைக்கும் நுணுக்கங்களைக் கொண்ட பால ராமரின் சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவர் செதுக்கியுள்ளார் என்றும் நேற்று பிற்பகல் பால ராமரின் சிலை கருவறையில் வைக்கப்பட்டது என்றும் அருண் தீட்சித் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : Dinamalar