திப்பு சுல்தானை அதிரவைத்த சிவன் ஆலயம்!

திப்பு சுல்தான் தமிழகத்தில் உள்ள ஒரு சிவன் ஆலயத்தை மிகுந்த பயபக்தியுடன் கண்ணீர் மல்க வணங்கி இருக்கிறார். அந்த ஆலயத்தைப் பற்றி காண்போம்.

Update: 2024-07-22 18:16 GMT

இந்தியாவை ஆண்ட பல மன்னர்களில் திப்பு சுல்தானும் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர். ‘மைசூரின் புலி’ என்று செல்லமாக அழைக்கப்படும் திப்பு சுல்தான், தன்னுடைய போர் திறமையால் ஆங்கிலேயர்களை அலறவிட்டவர். அத்தகைய திப்பு சுல்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிவன் கோவிலை பயபக்தியுடன் வணங்கி பல நிலங்களை மானியமாகக் கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதை பற்றித்தான் விரிவாக இந்த பதிவில் காண உள்ளோம்.ஒருமுறை திப்பு சுல்தான், கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் சிவன் கோவிலின் அதிசயத்தை கேள்விப்பட்டு அந்த கோவிலுக்கு மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று வருகிறார். கோவிலில் உள்ள சிவலிங்கம் அடிக்கடி அசையும் என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். ஆனால் இதை நம்ப மறுத்த திப்பு சுல்தான் அந்த சிவலிங்கத்தின் மீது கையை வைக்கிறார்.

திப்பு சுல்தான் சிவலிங்கத்தின் மீது கையை வைத்ததும், அவர் உடலில் பயங்கரமான அதிர்வு ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நெருப்பு மேலே கையை வைத்தது போல உணர்கிறார். உடனேயே சிவலிங்கத்தின் மீது வைத்த தன் கைகளை எடுத்துவிடுகிறார். கண்கள் இறுகி மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகிறார் திப்பு சுல்தான் மயக்கம் தெளிந்ததும் எழுந்து கண்ணில் நீர்மல்க கையெடுத்துக் கும்பிட்டு பட்டீஸ்வரரிடம் மன்னிப்பு கேட்கிறார். இவர் பட்டீஸ்வரர் சிவன் கோவிலுக்கு நிறைய நிலங்களை மானியமாக தந்துள்ளார். அவரை தொடர்ந்து மன்னர் ஹைதர் அலியும் நிறைய நிலங்களை மானியங்களாக கொடுத்திருப்பதாக கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிறது.

முற்காலத்தில் பேரூர் அரசமரம் நிறைந்த காடாகத்தான் இருந்தது. இங்கே நிறைய மாடுகள் மேய்ந்துக் கொண்டிருக்கும். தினமுமே ஒரு மாடு மட்டும் அங்கிருந்த புற்றில் பால் கறந்துக் கொண்டே இருந்திருக்கிறது. இதைப் பார்த்த சிறுவன் அதை ஊர் மக்களிடம் சொல்கிறான். ஊர் மக்களும் அந்த புற்று இருந்த இடத்தை தோண்டி பார்க்கும் போது அதிலிருந்து கிடைத்தவர்தான் பட்டீஸ்வரர்.பட்டீஸ்வரர் கோவிலை கல்லணை கட்டிய உலக புகழ் பெற்ற அரசனான கரிகாலசோழன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டியிருக்கிறார். இங்கிருக்கும் சிவப்பெருமானை பட்டீஸ்வரர் என்றும் தாயாரை பச்சைநாயகி அம்மன் என்றும் அழைக்கிறார்கள். இக்கோவில் நொய்யல் ஆற்றின் அருகிலேயே கட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பழமையான கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள சிற்பக்கலை மிகவும் போற்றுதலுக்குரியதாக இருக்கும். சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் பலரால் தேவாரப்பாடல் பாடப்பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரமும், நாற்றுநடும் திருவிழாவும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News