லக்ஷ்மி கடாக்ஷம் அருளும் ஸ்ரீ சக்கரம்
வேத ரகசியங்களை புராணங்கள் உணர்த்துகின்றன. புராணங்களை தொகுத்தளித்த வேதவியாசர், லலிதா உபாக்கியானத்தில் ஸ்ரீ சக்கரம் குறித்த ரகசியத்தை கூறியுள்ளார்.
உண்மை, நேர்மை, சத்தியம் அழிந்து பேரழிவுகளால் உலகம் வெப்பமாகியுள்ள இக் கலியுகத்தில் தேவியை குளிர்விப்பதற்காக அம்பிகையின் உக்கிரத்தை தணிப்பதற்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்டது தான் இந்த ஸ்ரீ சக்கரம். 9 கட்டுகள் கொண்ட அமைப்பான இந்த ஸ்ரீ சக்கரம் அம்பிகையின் சர்வ சக்தியும் பொருந்தியதாக திகழ்கிறது .
ஸ்ரீ சக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆபரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை , ஆவாரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள் மற்றும் சித்தி தேவதைகள் உள்ளனர். உலகை காத்தருளும் அம்பிகையை சிவபெருமானோடு மேருமலையில் அமர்ந்திருக்கிறார்.அந்த மகா மேருவின் உருவத்தை தாங்கியதாகவே இந்த ஸ்ரீ சக்கரம் திகழ்கிறது .தேவியின் எந்திரமே இந்த ஸ்ரீ சக்கரம் தான் .
அகத்திய முனிவருக்கு மகாவிஷ்ணுவின் வடிவமாகிய ஹயக்ரீவர் ஸ்ரீசக்கர ரகசியத்தை உபதேசித்தார் .ஸ்ரீ சக்கரம் உள்ள இடம் மகாலட்சுமி வாசம் செய்யும் தளமாகும். அங்கு துஷ்ட சக்திகளுக்கும் பில்லி சூனியம் மாந்திரீகங்களுக்கும் இடமே இல்லை .ஸ்ரீ சக்கரம் உள்ள இடத்தில் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். கோடிக்கணக்கான கோவில்களில் பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களை விட ஒருமுறை ஸ்ரீசக்கர வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் அதிக பலன் கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பாதரச லிங்கத்தை விட உயர்வான சிவலிங்கம் இருந்ததும் இல்லை. இருக்கப் போவதுமில்லை. இவற்றையெல்லாம் விட உயர்வானது ஸ்ரீசக்கர தரிசனம் மற்றும் ஸ்ரீ சக்கர பூஜை செய்ய பூஜை அறையை சுத்தமாக வைத்துக்கொண்டு சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ சக்கர வழிபாடு தொடங்க வேண்டும். அன்று எந்திர ஸ்தாபனம் செய்து கணபதி நவகிரகங்கள் ராசி நட்சத்திர தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபாடு செய்தால் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.