தமிழ் மாதங்களில் அடுத்து வரப்போகின்ற மாதம் கார்த்திகை இந்த கார்த்திகை மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் அகல்விளக்குகள் மின்னுவதை நாம் காண்போம் அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வந்தால் அதனை பெரிய கார்த்திகை என்பார்கள்
கார்த்திகை மாதம் முழுவதும் சிலர் தங்கள் வீட்டில் விளக்குகளை ஏற்றி வருவர் மற்ற சிலரோ பெரிய கார்த்திகை அன்றும் அடுத்த வருகின்ற இரண்டு நாட்களுக்கும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவர் எதற்காக இந்த மாதத்தில் விளக்கேற்றி வீட்டை பிரகாசமாக்கிறோம் என்று பார்த்தால் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்ற பழமையான பண்டிகைகளின் ஒன்று இந்த கார்த்திகை தீப நாள்
இந்த விழா அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் அவ்வையாரின் கவிதைகளிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பாக கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிவபெருமானை ஜோதி வடிவத்தில் காணலாம் என்பதை குறிப்பதாக கூறுகின்றனர் இதற்கு காரணம் தமிழர்கள் காலம் காலமாக கொண்டாடி வருகின்ற பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகையில் சிவபெருமான் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்கும் ஜோதி வடிவமாய் காட்சியளித்த நாள் என்று கூறுகின்றனர் அதன் காரணமாகவே கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றி ஒளி வடிவத்தில் சிவனை காணலாம் என்று கூறுகின்றனர் இதனாலே தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடப்படுகிறது.