சகல நன்மைகளையும் கொடுக்கும் கார்த்திகை: ஐயப்ப சுவாமிக்கு மாலையிடும் பக்தர்கள் செய்ய வேண்டிய முக்கிய முறைகள்!

Update: 2024-11-20 08:07 GMT

கார்த்திகை மாதம் பிறந்த உடனே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சபரிமலைக்கு மாலை அணிதல் தான் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்தியுடன் ஐயப்பன் நாமத்தை சொல்லிக் கொண்டே கடுமையான விரதத்தை மேற்கொண்டு சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசித்து வருவார் அப்படி ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை பற்றி இங்கு காணலாம்

ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள விரும்புபவர்கள் கார்த்திகை மாதத்தின் முதல் நாள் அல்லது கார்த்திகை 19 ஆம் தேதிக்குள் மாலை அணிந்து கொள்ள வேண்டும் 

மாலை அணிந்து குறைந்தது 41 நாட்களுக்கு விரதம் இருக்க வேண்டும் மேலும் துளசி மணி 108 கொண்டது அல்லது 54 ருத்ராட்சங்களை கொண்ட மாலையை வாங்கி அதில் ஐயப்பனின் திருவுருவம் பதித்த டாலரையும் சேர்த்து விரதம் மேற்கொள்ள இருப்பவர் அணிந்து கொள்ள வேண்டும் 

மேலும் விரதம் இருப்பவர்கள் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும் மாலையில் குளிர்ந்த நீரில் நீராடி நீளம் கருப்பு காவி அல்லது பச்சை போன்ற நிறங்களில் மட்டுமே உடைகளை அணிய வேண்டும்

சபரிமலைக்கு சென்று வந்த பிறகு மாலையை கழட்ட வேண்டும் அதற்கு இடையில் ரத்த சம்பந்தம் இருப்பவர்கள் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழட்டி வைத்த பிறகு அந்த துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும் 

மது மாமிசம் புகைபிடித்தல் போன்றவற்றை விடுவதோடு பிறர் வீட்டில் சாப்பிடும் நிலை ஏற்பட்டால் மாலை அணிந்தவர் வீட்டில் மட்டுமே சாப்பிட வேண்டும் மற்றவர்கள் வீட்டில் பால் அல்லது பழம் மட்டும் சாப்பிடலாம் மேலும் மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து மாலையை கழட்டும் வரையில் முடி வெட்டுதல் மற்றும் சவரம் செய்தலை தவிர்க்க வேண்டும்

இவற்றையெல்லாம் தவிர மற்றவர்களிடம் சாந்தமாக பழகி குரோதம் வெறுப்பு போன்றவை நீங்க பிறர் மனம் புண்படும் வகையில் பேசாமல் இருந்தால் வேண்டும் இவையே கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய முறைகள் மற்றும் விதிமுறைகள்.

சபரிமலைக்கு ஐயப்பனுக்காக மாலையிடுபவர்கள் தான் விரதம் இருக்க வேண்டும் என்பதல்ல இந்த மாதத்தில் ஒவ்வொரு நாட்களுமே சிறப்பான நாட்ங்கள் அதனால் மாலை அணியாத மக்களும் கார்த்திகையின் அனைத்து நாட்களிலும் அதிகாலை எழுந்து நீராடி சிவபெருமானையும் பெருமாளையும் விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் கைகூடும் என்பது நம்பிக்கை 

Tags:    

Similar News