பிரம்மனுக்கு ஏன் கோவில் இல்லை?வரலாறு காண்போம்!
படைப்புக்கடவுளான பிரம்மதேவன் மலர்ந்த தாமரை மலரின் மீது அமர்ந்து இருக்கிறார் அவருக்கு கோவில் இல்லாத கதை குறித்து காண்போம்.;

படைப்புக் கடவுளான பிரம்மதேவன் மலர்ந்த தாமரை மலரின் மீது அமர்ந்து இருக்கிறார். தாமரை ஆத்ம ஞானத்தைக் குறிக்கிறது. ஆத்ம ஞானமே படைப்பின் அடிப்படை. பிரம்மாவின் இரண்டு கண்கள் சூரிய சந்திரர். அவருடைய நான்கு கைகளும் தர்மம் ,அதர்மம் ,காமம், மோட்சம் என்ற பிறவிப் பயனை குறிக்கிறது. அவருடைய நான்கு முகங்களும் நான்கு வேதங்களை குறிப்பிடுகின்றன வேதம் என்றாலே ஞானம் என்று பொருள் பிரம்மாவுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்ததாக புராணம் கூறுகிறது பரமேஸ்வரனுக்கும் தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் அவரும் நானும் ஒன்றுதான் என்று கர்வம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட ருத்திர பிரம்மா வீடு ஒரு தலையை கிள்ளி எடுத்துவிட்டார்.
ஆனால் அந்த தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. இதை அடுத்து சிவபெருமான் பிச்சாடமூர்த்தியாக அந்த கபால தலையில் யாசகம் பெறும் நிலை உண்டானது. அந்த கபாலம் இறங்கும்போது அது ஈசனின் கையை விட்டு அகலும் என்பது விதி. ஒருமுறை அன்னபூரணியிடம் ஈசன் யாசகம் பெரும்போது கபாலம் நிரம்பி அது கையை விட்டு அகலும்.ஈசனின் கையில் இருந்ததை பிரம்ம கபாலம் என்பார்கள். இதற்கு இன்னொரு கதையும் சொல்வார்கள்.ஈசனின் அடியையும் முடியையும் காண்பதற்காக வராக அவதாரம் எடுத்து விஷ்ணுவும் அன்ன வடிவம் கொண்டு பிரம்மனும் சென்றனர். ஜோதியாக உயர்ந்து நின்ற ஈசனின் முடியை வானில் எவ்வளவு உயரம் பறந்த போதிலும் பிரம்மனால் காண முடியவில்லை.
அப்போது ஈசனின் முடியில் இருந்து விழுந்து கொண்டிருந்த தாழம்பூவிடம் தான் ஈசனின் முடியை பார்த்து விட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி பிரம்மன் கேட்டார். அதன்படியே தாழம்பூவும் சாட்சி சொன்னது. இதை அறிந்த சிவபெருமான் பூலோகத்தில் பிரம்மனுக்கு கோவில் இல்லாமல் போகும்படியும் தாழம்பூவை பூஜையில் சேர்க்கக்கூடாது என்றும் சாபம் அளித்தார். அவர் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறார் என்று வேதாந்தம் விளக்குகிறது. படைப்பு நடக்கும் இடமில்லாமல் பிரம்மாவின் கோவில் என்றுதான் நாம் பார்க்க வேண்டும் அப்படியானால் இந்த உலகமே பிரம்மாவின் கோவில் தான். எனவே தான் பிரம்மாவிற்கு கோவிலும் இல்லை வழிபாடும் இல்லை. அதே நேரம் ராஜஸ்தான், ஒடிசா ஆகிய இடங்களில் பிரம்மனுக்கு தனி ஆலயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.