விதியை மாற்றும் ஓம் மந்திரம் !
ஓம் எனும் பிரணவ மந்திரம் எவ்வாரெல்லாம் அற்புதங்களை நிகழ்த்தும் என்பதை இங்கு காணலாம்.
மனிதர்கள் தன்னை சுற்றியிருப்பவர்களை மட்டுமல்ல, தன்னையும் சேர்த்து வழிகாட்டி கொள்ள முடியும். தன்னை தானே வழிகாட்டுதல் என்பது பொருள் தன்மையிலானதாக மட்டும் இல்லாமல், உள்நிலையில் இருக்கும் நம் விழிப்புணர்வையும் வழிநடத்த முடியும். அந்த வகையில், ஓம் எனும் பிரணவ மந்திரம் எவ்வாரெல்லாம் அற்புதங்களை நிகழ்த்தும் என்பதை இங்கு காணலாம்.
இந்து புராணங்களின் படி, ஆதியில் ஒரே சப்தம் அல்லது ஒரே சொல் இருந்தது அதுவே ஓம் என்பது. வெறும் அண்டம் அன்றி வேறு எதுவும் இல்லாத வேளையில் முதன் முதலாக படைப்பு வெளிப்பட்ட போது எழுந்த அதிர்வின் ஒலியானது ஓம் என்பதாக தான் இருந்தது என நம் உபநிஷதங்கள் சொல்கின்றன. எனவே பிரபஞ்சத்தின் முதல் ஒலி ஓம் என சொல்லலாம். மும்மூர்த்திகளும் முத்தொழிலும் இந்த ஓம் எனும் பிரணவத்திலிருந்தே உதித்தது என்ற கருத்தும் உண்டு.
வாமதேவ ரிஷி அவர்கள், ரிக்வேதத்தில் ஓம் என்கிற ஒலியை சமுத்திரம் என்றும், அபரீமீதம் அதாவது எல்லையற்ற தன்மை என்றும் ரூபமற்ற அதாவது வடிவமற்ற தன்மை என்றும், சர்வவியாபி அதாவது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் ஒலி என்றும் சொல்கிறார். ஓம் என்பது பிரம்மம். பதஞ்சலில் யோக சூத்திரம் ஓம் எனும் ஒலியை ஈஸ்வர பிரணிதனா என அழைக்கின்றது. இத்தனை முக்கியத்துவங்கள் நிரம்பியது என்பதால் தான் ஓம் எனும் மந்திரத்தின் மீது ஒருவர் தியானம் செய்கிற போது அவருடைய மனஅலைகள் ஒருமுகம் அடைந்து கவனத்தை ஓரிடத்தில் குவிக்க முடிகிறது.
ஓம் என்பதை வார்த்தை என இந்து மதம் குறிப்பதில்லை. அது ஒரு ரிதம்,அது ஒரு லயம். ஓம் எனும் சொல் மூன்று சமஸ்கிருத சப்தங்களால் ஆனது. ஆ, அவ், மா இது ஒரு புள்ளியில் இணையும் பொழுது அவும் அல்லது ஓம் என்கிற சப்தத்தை நாம் கேட்கிறோம். ஓம் என்கிரா ஒலியினுள் சகலவிதமான தெய்வீக சப்தங்களுள் உண்டு. ஓம் என்கிற ஒலி மிக சிறியது போல பார்வைக்கு தோன்றினாலும் தனியொரு பூஜையாக, தனியொரு மந்திரமாக ஜபமாக திகழும் வல்லமை ஓம் எனும் ஒலிக்கு உண்டு. ஓம் எனும் ஒலியை ஒருவர் உச்சரிக்கிற போது அவருடைய உடலில் ஏற்படும் அதிர்வு மனிதரின் ஏழு சக்கரத்திற்குள்ளும் ஊடுருவி நம் ஆன்மாவை தூண்டக்கூடியதாக இருக்கிறது.
சீரான சுவாசத்திற்கு, மனதை ஒருமுகப்படுத்தி கவனத்தை குவிப்பதற்கு, பல விதமான ஆரோக்கிய நன்மைகளை பெறுவதற்கு விஞ்ஞான ரீதியாகவும் நிறுபிக்கப்பட்ட மகத்தான மந்திரம் ஓம்.
Image Source : Wallpaper. Safari, Pinterest.in