அரண்மனை போன்ற கோவிலமைப்பு, 1500 ஆண்டுகள் முன் கிருஷ்ணரின் பேரனால் கட்டப்பட்ட அதிசய ஆலயம்.!

அரண்மனை போன்ற கோவிலமைப்பு, 1500 ஆண்டுகள் முன் கிருஷ்ணரின் பேரனால் கட்டப்பட்ட அதிசய ஆலயம்.!

Update: 2020-12-14 06:00 GMT

குஜராத் மாவட்டத்தின் தேவ பூமியான துவாரகை மாவட்டத்தில்  அமைந்துள்ளது துவாரகாதீசர் கோவில். விஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணருக்கு அர்பணிக்கப்பட்ட கோவில் இது. இது 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஐவரும் 13 பாக்கள் இந்த கோவிலின் மீது பாடியுள்ளனர்.

அரபிக் கடலோரம் ஒகா துறைமுகத்தின் அருகே அமைந்திருக்கும் கோமதி நதியின் கரையில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். சமஸ்கிருதத்தில் துவார் என்றால் வாயில் என்று பொருள். எனவே துவாரகையை மோட்சத்தின் வாயில் என்றும் அழைக்கலாம். ஆரம்ப காலத்தில் துவாரகை கிருஷ்ணரால் தேவ சிற்பியின் உதவியுடன் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே நிர்மாணிக்கப்பட்ட நகரமாகும். தன்னுடைய காலத்திற்கு பின்பாக அவர் இந்த உலகை விட்டு நீங்கிய பின் இந்த நகரம் பல முறை கடலில் மூழ்கியுள்ளது.

தற்போதுள்ள இந்த கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை கிருஷ்ணரின் பேரனான வஜ்ரநாபி என்பவர் கி.மு. 400 இல் கட்டியுள்ளார். அந்த பழைய கோவிலை மொஹ்முத் பெகடா என்பவர் அழித்து விட்டார். அதன் பின் இந்த தற்போதைய கோவிலை சாளுக்கிய கட்டிடக்கலையின் சாட்சியாக 16 நூற்றாண்டில் கட்டினார்கள். இது நான்காம் முறையாக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலை இந்த ஊர் மக்கள் ஜகத் மந்திர் என அழைக்கின்றனர். அரண்மனை போன்ற அமைப்புடைய இந்த கோவில், கிருஷ்ணர் வாழ்ந்து, உயிர் நீத்த இடம் என்னும் முக்கியத்துவத்தை ஏந்தியிருக்கிறது.

இதனுடைய தொன்மையான புராதன முக்கியத்துவத்தினால் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட பரிந்துரைத்துள்ளது. இங்கேயிருக்கும் கோவில் கொண்டு வீற்றிருக்கும் கிருஷ்ணர் 17 முறை உணவு உட்கொண்டு மணிக்கொரு முறை உடைமாற்றும் பழக்கம் உண்டு. அதிகாலையில் தங்கபல்குச்சியால் பல் துளக்கி இனிப்பு பலகாரங்கள் படைக்கப்படுகின்றன. ஏராளமான அதிசயங்கள் கொண்ட இடம் இது, தீர்த்தம், பிரசாதம் , சர்க்கரை, பால், தயிர், அப்பம் அக்காரம் போன்ற பல வித பிராசதங்கள் முறையான நேர இடைவெளியில் வழங்கப்படுகிறது. இந்த உணவு முறையை போக் என்று அழைக்கிறார்கள்.

இந்த கோவிலின் கொடியில் சூரியன் மற்றும் சந்திர பிம்பம் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஐந்து முறை இந்த கொடி ஏற்றப்படுகிறது. மற்றும் பக்தியில் ஊரிய மீரா தேவி அவருடைய இடமான மோவாரிலிருந்து நடந்தே வந்து கிருஷ்ணருடன் இரண்டர கலந்த புனித இடமும் இதுவே ஆகும். கிருஷ்ணரின் தொன்மங்கள் நிறைந்திருக்கும் இந்த நகரை ஆன்மீக பாதையில் இருக்கும் பக்தர்கள் ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டும்.

நன்றி : விக்கிபீடியா

Similar News