2 மாதங்களுக்கு பின் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி !

இரண்டு மாதங்களுக்கு பின்னர் சதுரகிரி கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-18 03:32 GMT

இரண்டு மாதங்களுக்கு பின்னர் சதுரகிரி கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில் சிறப்பு பெற்றது. பௌர்ணமி தரிசனத்திற்காக மலைப்பாதை வழியாகச் சென்று பக்தர்கள் தரிசனச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக சதுரகிரி மலைக்கு பௌர்ணமி தினத்தில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வது முடங்கியது. பல முறை பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த பின்னர் பக்தர்களுக்கு இந்த பௌர்ணமிக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டு மாதங்களுக்கு பின்னர் சதுரகிரி கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டரை மாதங்களுக்குப் பின்பு பிரசித்திபெற்ற சதுரகிரி கோவிலுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற 21ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியால் இன்று முதலே பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர்.

Source: Dinakaran

Image Courtesy: Vikatan


Tags:    

Similar News