தெய்வீக சக்தி உடைய விருட்சங்களும் நன்மைகளும்!

தெய்வீக சக்தி உடைய மரங்கள் பற்றியும் அதனை வளர்ப்பதினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் காண்போம்.

Update: 2024-05-24 16:54 GMT

மாமரம்:மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லா விதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுப காரியங்கள் செய்யும்போதும் வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது .

அரசமரம்:அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைக்கூடும். மரத்தின் விழுதுகள் உடல் குறைவை நீக்கும் தன்மையுடையது.

மருதாணி மரம்:மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை இம்மரத்தின் பழங்களை தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

ருத்ராட்ச மரம்:ருத்ராட்ச மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராட்ச கொட்டையை உடலில் அணிந்து கொண்டால் ரத்தம் சுத்தமாகும். ரத்த அழுத்தம் சீராகும். கோபம் குறையும். மனதில் சாந்தம் உண்டாகும்.

சர்ப்பகந்தி:இம் மரத்தின் அருகே பாம்புகள் வராது. மரத்தின் குச்சிகளை உடலில் கட்டிக் கொண்டால் பாம்புகள் தீண்டாது. 

Similar News