வீடு வளமாக இருக்க இந்த செடிகளை வைக்காதீர்கள்! வாஸ்து குறிப்பு !

Update: 2021-11-24 00:30 GMT

செடியும் மலரும் சுற்று சூழலை மட்டுமல்ல மனதையும் பசுமையாக, புத்துணர்வாக வைத்திருக்கும். மலர்களின் நறுமணமும், செடிகளின் பசுமையும் கண் வழியே உடல் மனம் முழுவதும் பரவி ஒருவித புத்துணர்ச்சியை நமக்கு வழங்கும். உலகின் உயிர்ப்புமிக்க பொருள்களில் மிகவும் புனிதமானதாக மலர்கள் கருதப்படுவதாலேயே அவை இறைவனுக்கு அர்பணிக்கப்படுகின்றன.

அந்த அடிப்படையில் இப்போது செடிகளை வீடுகள் தோரும் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெருகி வருகிறது. பல வீடுகளில் இன்று மாடி தோட்டம் அமைத்து காய்கறிகளை இயற்கை முறையிலேயே விளைவித்து உண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க வீட்டில் நல்ல அதிர்வுகளை அதிகரிப்பதற்காக செடிகளை வளர்ப்பு குறித்த சில முக்கியமான குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சிலர் பராமரிப்பு வேலையை குறைக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் செடி அல்லது கொடிகளை வீட்டில் படர வைத்திருப்பார்கள். இது அலங்காரத்திற்கு நன்றாக இருந்தாலும் அதில் இருக்கும் ப்ளாஸ்டிக் கூறுகள் நமக்கு நல்ல அதிர்வுகளை கடத்தாது என்பதால் முடிந்தளவு செயற்கை செடிகொடிகளை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக குறைவான பராமரிப்பு உடைய சிறிய வகை செடிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, போன்சய் செடிகளை வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் வாசனை அதிகமான செண்பகம் போன்ற மலர்களை வீட்டினுள் வளர்ப்பதை விடவும், இவற்றை வீட்டிற்கு வெளியே, கொள்ளை புறம் அல்லது மொட்டை மாடிகளில் வளர்க்கலாம்.

வீட்டின் முகப்பில் ஆரஞ்சு அல்லது எலும்பிச்சை, நெல்லி ஆகிய மரங்களை வளர்ப்பதால் வாஸ்து தோஷங்கள் ஏதேனும் இருப்பின் அவை நீங்கும் மற்றும் தீய சக்திகள் எதுவும் வீட்டை அண்டாமல், இந்த செடிகளில் இருக்கும் ஆற்றல் வீட்டினை பாதுகாக்கும்.

மேலும் வீட்டில் மூங்கில் வளர்ப்பதும், அதற்கு பஞ்ச பூதங்களின் ஆற்றலை கொடுத்து உயிர்ப்பூட்டுவதும் மிகுந்த நலம் தரும் ஒன்றாகும். காக்டஸ் செடியை வீட்டில் வைப்பது நல்லது என்கிறது வாஸ்து. பணி இடங்களில் வைப்பதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மேலும் மணி ப்ளான்ட் என்றழைக்கப்படும் செடியை வீட்டின் தென்மேற்கு மூலையில் அல்லது கன்னி மூலையில் வைக்கலாம்.

அழுகிய நிலையில் உள்ள செடிகள், வாடிய செடிகளை முறைப்படி அப்புறப்படுத்துவது நல்லது.

 Image : Housekeeping

Tags:    

Similar News