இந்து மரபில் ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் இருப்பது பூஜையறை. பூஜையறை இல்லாத வீடுகளே இல்லை எனலாம். அறை போன்ற அமைப்பு இல்லாவிடினும் கூட, சில புகைப்படங்களுடன் கூடிய பிரத்யேக இடங்களேனும் அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த பிரத்யேக இடத்தினை சிலர் முறையாக பராமரிக்க தெரியாமல் வைத்திருக்க கூடும். பூஜையறையில் அவசியம் செய்ய வேண்டிய குறிப்புகள் இந்த கட்டுரையில். ஒவ்வொரு பூஜையறையிலும் அவசியம் இடம் பிடிக்க வேண்டிய விஷயங்களுள் முக்கியமான ஒன்று அரிசி. மேலும் இறைவனுக்கு அர்பணம் அளிக்கிற போது நாம் வழங்க வேண்டிய அர்பணங்களுள் மற்றொரு முக்கியமான பொருள் தாம்பூலம் எனும் வெற்றிலை. இதனோடு சில கிராம்புகளை வைப்பது நல்லதிர்வுகளை தரும் என நம்பப்படுகிறது.
மேலும் தீபம் என்பது நம் பூஜையறையின் இன்றியமையா அம்சம். அனைவரும் பல விதமான திரிகளில், பல விதமான எண்ணை அல்லது நெய்யில் தீபம் ஏற்றுவோம். ஒவ்வொரு தீபமேற்றும் முறைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்ற போதும். எந்தவகையான தீபமேற்றினாலு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் அந்த தீபத்தின் ஓளிக்கீற்று எந்தவித தளர்வுமின்றி தீர்கமாக உறுதியாக எரிய வேண்டும்.
மலர்களை அர்பணித்தல், தீபம் ஏற்றுதல் அதனை தொடர்ந்த தியானம் இது ஒரு முழுமையான பூஜை சுற்று ஆகும். அதை போலவே நீங்கள் பிரதான தெய்வமாக நினைக்கும் மூர்த்திக்கு உகந்த நிறத்தில் உடையணிந்த் வணங்குவதும் நல்ல பலன்களை கொடுக்கும். உதாரணமாக பெருமாளை வணங்குகிற போது மஞ்சளும், அன்னை அம்பிகையை வணங்குகிற போது சிவப்பும் சிவபெருமானுக்கு வெளிற் நிறங்களும் உகந்ததாகும்.
மேலும் தெய்வங்களை வணங்கும் போது நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது இஷ்ட தெய்வத்துடன் நம் குல தெய்வத்தை வைத்து வணங்க வேண்டும் என்பதை. பலரும் தங்கள் குல தெய்வத்தை வணங்க தவறுவதால் பல இடர்களை சந்த்க கூடும். இடர்களில் இருந்து மீண்டு வர குல தெய்வ வழிபாடு உதவும். எனவே பூஜையறையில் குல தெய்வத்தின் திருவுருவப்படம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் திருவுருவப்படம் இல்லாவிடினும், சூரியன், கங்கை, துர்கை, சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய பஞ்ச தேவர்களை அனுதினமும் நினைத்து வணங்குவது நம்முடைய அன்றாட பிரச்சனையிலிருந்து விடுதலை தரும்.
Image : Architecture Ideas