கையெழுத்தை வைத்து தலையெழுத்தை சொல்ல முடியுமா? முடியும் என்கிறது சாஸ்திரம்

Update: 2022-11-12 01:00 GMT

ஒரு பழமொழி சொல்வது வழக்கம், கையெழுத்து சரியாக இல்லை எனில் அவர்கள் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்பார்கள். எதுகை மோனையை தாண்டி இதன் உண்மைத்தன்மை எப்படி பட்டது என்பது ஆய்வுக்குரியது. கையெழுத்து என்பது நாம் சாதரணமாக எழுதுவது ஒன்று. மற்றொன்று நம் அடையாளத்தின் பிரதிபலிப்பை சட்ட ரீதியாக மற்றும் எழுத்து ரீதியாக பயன்படுத்தும் போதும் பதிவு செய்வது. கைரேகையும், கையெழுத்தும் நம் பிரதிநிதி என சொல்லலாம்.

ஹேண்ட் ரைட்டிங், சிக்நேச்சர் என இரு வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. இதில் சிக்னேச்சர் எனும் கையெழுத்து நம் இயல்பை உணர்த்துவதாக இருக்கிறது. தன்னுடைய சொந்த குணாதிசயங்களை, வல்லமையை, பலம், பலவீனம் பிரதிபலிப்பு நம் தலைமை பண்பு போன்ற பல விஷயங்களின் அடையாளமாக நம் கையெழுத்து இருக்கிறது.

கையெழுத்து என்பது ஒரு சில எழுத்துக்களால் ஆனது அதிகபட்சம் ஒரு தனிமனிதரின் பெயர். ஆனால் அதற்கு இருக்ககூடிய பலம் என்படு மிக அதிகமானது. பலவிதமான கையெழுத்து உண்டு. ஒவ்வொருவரும் தங்களின் தன்மைக்கு ஏற்றவாறு கையெழுத்து இடுவார்கள். நம் வாழ்வில் நாம் பலவிதமான கையெழுத்துக்களை நாம் காண முடியும்.

அந்த கையெழுத்து விதம் அந்த மனிதருக்குரிய தன்மைகளை சொல்லும். உதாரணமாக, சிலர் தங்கள் கையெழுத்தை கேப்பிட்டல் எழுத்து அல்லது பெரிய அளவில் இடுவார்கள். இதற்கான அர்த்தம், அவர்கள் எப்போதும் பேச்சு ஆற்றலில் சற்று முன்னேற்றம் தேவைப்படுவபவர்களாக இருப்பார்கள். அடுத்து தன் பெயரில் தங்களின் முதல் பெயரை மட்டும் கையெழுத்தாக வைத்து கொண்டு, குடும்ப பெயர் அல்லது இரண்டாம் பெயரை கையெழுத்தில் இடம் பெற செய்ய மாட்டார்கள். இவர்கள் தங்கள் இலக்கில் மிகவும் கவனமான குறிக்கொள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிலர் தங்களின் இனிஷியலை மட்டுமே பிரதான கையெழுத்தாக வைத்திருப்பார்கள். இதன் பொருல் அவர்கள் தங்கள் முதல் அறிமுகத்தை எப்போதும் மிக சிறப்பாக வைத்திருப்பார்கள் என்பதை உணர்த்துகிறது.

சிலர் வளைவு நெளிவுகளுடன் கர்விங் எனப்படும் முறையில் கையெழுத்து இடுவார்கள். இந்த வகையில் கையெழுத்திடும் நபர்கள் அனைத்து விதமான சூழலுக்கும் வளைந்து நெளிந்து செல்லக்கூடியவர்களாக, சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள்.

சிலர் கையெழுத்தின் இறுதியில் புள்ளி வைப்பார்கள் சிலர் பல கோணங்களில் உயர்த்தி இறக்குவார்கள் இது போன்ற பல வகைக்கும் பல தன்மை உண்டு. இந்த கையெழுத்து ஆய்வுகலை கிராபோ தெரப்பி எனவும் அழைக்கின்றனர். இவையெல்ல்லாம் ஒரு யூகம் மட்டுமே அன்றி ஒவ்வொரின் தனித்துவத்தை முடிவு செய்வது அவரவரின் கடின உழைப்பும் அறம் சார்ந்த வாழ்க்கையும் தான்.

Tags:    

Similar News