வெப்ப அலையில் இருந்து பக்தர்களை காக்க ராமர் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!

வெப்ப அலையில் இருந்து பக்தர்களை காக்கும் நோக்கில் அயோத்தி ராமர் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது .

Update: 2024-06-01 11:50 GMT

கோடைகாலத்தை ஒட்டி வட இந்திய மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களை வெப்ப நிலையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இக்கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தரிசன வரிசைகளில் பக்தர்கள் குறைந்த நேரமே காத்திருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை முகாம் அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது:-

ராமர் கோயில் வளாகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது .அங்கு 500-க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பெரிய அளவிலான ஏர் கூலர்களும், வாட்டர் கூலர்களும் இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்றார். கோயில் நிர்வாக அறக்கட்டளை தவிர உள்ளூர் நிர்வாகமும் பக்தர்களுக்காக சில ஏற்பாடுகளை செய்துள்ளன. வெப்ப வாதம் உள்ளிட்ட பாதிப்புகளால் பக்தர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயாராக இருக்குமாறு மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.


SOURCE :Newspaper 

Tags:    

Similar News