ஆன்மீக முன்னேற்றத்திற்கான உங்கள் அறிவுரை என்ன? ரமண மகரிஷியின் ஆச்சர்ய பதில்!

Update: 2021-04-02 00:15 GMT

ரமண மகரிஷி அவர்கள் டிசம்பர் 30 அன்று தமிழகத்தின் திருச்சுழி எனும் இடத்தில் அவதரித்தார். தன்னுடைய 16 ஆம் வயதில் தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான ஆன்மீக அனுபவத்தின் மூலம் நான் என்பது உண்மையில் என்ன என்கிற ஆழமான தேடல் அவருக்கு ஏற்பட்டது. ரமண மகரிஷி அவர்கள் ஆன்மீகத்தில் உயர்வை அடைய பலவிதமான பாதைகளை, பயிற்சிகளை வழங்கினார் என்ற போதிலும், அவர் முதன்மை பயிற்சியாக அனைவருக்கும் சொல்வது சுய பரிசோதனை.

தான் யார் என்கிற சுய பரிசோதனையை ஒருவர் செய்கிற போது, அந்த பாதை ஒருவருக்குள் இருக்கிற அறியாமையை உடைக்கும். விழிப்புணர்வை உருவாக்கும். இந்த இரண்டும் பக்தியுடனும் முழுமையான சரணாகதியுடனும் இணைந்து இருக்க வேண்டும்.

மிகவும் எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் மகரிஷி அவரகள். அவரின் ஆரோக்கியம் சற்று தவறிய நாட்களுக்கு முன்பு வரையிலும் ஆசிரமத்தின் பல்வேறு விதமான பணிகளை தாமே முன் நின்று செய்வந்தார். உதாரணமாக ஆசிரமத்தில் உணவு தயார் செய்வது, பாக்கு மட்டையிலான தட்டுகளை உருவாக்குவது போன்ற வேலைகளை எல்லாம் தம் கரங்களே செய்து வந்தார்.


திருவண்ணாமலைக்கு வந்த பின்பாக, மகரிஷி அவர்கள் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். அங்கு ஆயிரங்கால் மண்டபத்தில் முதல் சில வாரங்கள் செலவழித்தார். பின்பு கோவிலின் பல்வேறு இடத்தில் தவமியற்றினார். பின்பு பாதாள லிங்கம் இருக்குமிடம் சென்று அங்கே தியானத்தில் மூழ்கினார். தன்னை கொடும் பூச்சிகளும், விஷ ஜந்துக்களும் கடிப்பதை கூட உணராத வகையில் மிகத்தீவிரமான தவத்தை அவர் இயற்றினார்.

ஒரு முறை அமெரிக்காவில் ஏராளமான பின் தொடர்பாளர்களை வைத்திருக்கும் சுவாமி யோகானந்தா மகரிஷியிடம் ஒரு கேள்வியை எழுப்பினார் ஒரு மனிதரின் அன்மீக முன்னேற்றத்திற்கு அவருக்கு எந்த மாதிரியான ஆன்மீக அறிவுரையை வழங்க வேண்டும். அதற்கு மகரிஷி அவர்கள் அது ஒவ்வொரு தனிமனிதரின் ஆன்மீக புரிதலை பொருத்தது என்று பதிலளித்தார்.


ரமண மகரிஷி அவர்கள் அழுந்த சொல்வது ஒன்றை தான், எப்போது நீங்கள் உடலும் அல்ல, உங்கள் எண்ணங்களும் நீங்கள் அல்ல, உங்கள் ஆசை உணர்ச்சி எதுவும் நீங்கள் அல்ல. நீங்கள் இதற்கும் அப்பாற்ப்பட்டவர்கள். நீங்கள் என்பது தூய்மையான விழிப்புநிலை. எப்போது நான் உடல் அல்ல, மனம் அல்ல, என் எண்ணம் அல்ல உணர்வுகளும் அல்ல என்பதை புரிந்து கொள்கிறீர்களோ அப்போது உங்கள் இறைவனுடன் கலக்கிற தன்மையின் புனித பயணத்தை நீங்கள் தொடங்கி விட்டீர்கள் என்று பொருள் என்கிறார்.

Tags:    

Similar News