அமிர்தகுடம் ஏந்திய அபூர்வ முருகன்!
தமிழ்நாட்டின் தென்கோடியாக இருக்கும் வேதாரண்யம் கோடியக்கரையில் அமிர்தகுடம் ஏந்திய முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் 'மூக்முனை' என்று வர்ணிக்கப்படும் வனம் சூழ்ந்த கடற்கரை தலம் தான் கோடியக்கரை. வேதவனத்தின் தென்கோடியாக இருக்கும் இக்கோடியக்கரை காடுகளால் சூழப்பட்டுள்ளது. எங்கு நோக்கினும் உப்பளங்கள் காணப்படுகின்றன. கோவில் இருக்கும் இடம் கோடியக்காடு என்றும் கடற்கரை பகுதி கோடியக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. நவகோடி சித்தர்கள் வழிபட்ட இந்த பதில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. இதற்கு சான்றாக சித்தர் கட்டம் ஒன்றும் கடற்கரையில் உள்ளது .
நவகிரக தோஷத்திலிருந்து விடுதலை கொடுக்கும் தலமாகவும் இது திகழ்கிறது. .பிரம்மா ,நாரதர், இந்திரன், சுவேத மகரிஷி, குழக முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டு திருவருள் பெற்றுள்ளனர். தலத்திற்கு அருகே அகத்தியர் தங்கி சிவபூஜை செய்த 'அகத்தியம்பள்ளி' என்ற சிவதலம் அமைந்துள்ளது. சோழநாட்டு காவிரி தென்கரையில் 127 வது திருத்தலமாக இது புகழ் பரப்பி நிற்கின்றது. சுந்தரர் இத்தலம் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார் .சேரமான் பெருமானுடன் இங்கு வந்த சுந்தரர் வேடர்கள் பலர் இங்கு வாழ்ந்ததாக குறிப்பிட்டு இத்தல அம்பிகையை 'மையார் தடங்கண்ணி' என்று புகழ்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இத்தால முருகன் மீது திருப்புகழ் மாலை ஒன்றை சாத்தியுள்ளார்.
கோடிய காட்டு முகத்துவாரத்தில் ராமபிரான் சேதுபந்தனம் செய்ய நின்ற இடத்தில் ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும். திருவாவடுதுறை குருமூர்த்திகளான சித்தர் சிவப்பிரகாசர் இங்கே ஜீவசமாதி அடைந்துள்ளார். கோடியக்கரை கடலில் ஒரு முறை நீராடினால் ராமேஸ்வரம் சேதுவில் 100 முறை நீராடிய பலனை பெறலாம் என்கிறார்கள். எனவே இது ஆதி சேது என்று போற்றப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் இந்த திருப்பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது .இந்த அமிர்த கலசத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார்வாயு பகவான். அப்போது அசுரர்கள் அனைவரும் சேர்ந்து சூறாவளி காற்றை உருவாக்கினார்.அதனால் வாயு பகவான் அமிர்த கலசத்தை தவறவிட்டார்.