விநாயகருக்கு எருக்கம் பூ அணிவித்து வழிபடுவது ஏன்? அதனால் ஏற்படும் நன்மைகள்
அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் இந்து கடவுள்களில் விநாயகர் முக்கியமானவர். முழு முதற் கடவுள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வீடு, தொழில் பள்ளி, கோவில் என எந்த இடத்திலும் முகப்பில் இருப்பவர் முக்கியமானவர். சகல விதமான பிரச்சனைகளையும் தீர்த்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பவர் கணேசர்.
திருமணம் தொடங்கி சகலவிதமான நல்ல காரியங்கள், முக்கியமான பூஜைகள், வீட்டில், வெளியில் சிறு சிறு காரியங்கள் என அனைத்திலும் இவரை வணங்குவதே முதல் கடமையாக உள்ளது. எனில், இவரின் அன்பை, அருளை ஒருவர் முழுமையாக பெறுவது எப்படி?
கடவுள்களின் அருளை பெற நிறைந்த மனம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பக்தியுமே போதுமானது. எனினும், கடவுள்களுக்கு விருப்பமானவை என சிலவை வகுக்கப்பட்டுள்ளன. இவை வெறும் வார்த்தை அளவில் மட்டுமல்லாமல், இவ்வாறான விருப்பங்களின் பின் ஒவ்வொரு காரண காரியம் சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விநாயகருக்கு விருப்பமானவை என சில உண்டு. உதாரணமாக, மோதகம், எருக்கம் பூ, அருகம்புல் போன்றவை. அந்த வரிசையில் விநாயகரை குங்குமம் கொண்டு வழிபடுவது முக்கியமானதாக கருதப்படுகிறது. அனுமர், பைரவர் போன்ற கடவுள்களுக்கு எல்லாம் குங்கும வழிபாடு மிகவும் உகந்தது. அதன் வரிசையில் விநாயகருக்கும் குங்கும வழிபாடு உகந்தது என சொல்லப்படுகிறது.
புதன் கிழமைகளில் விநாயகருக்கு குங்குமத்தை அர்பணிப்பதன் மூலம் நம் வலி, துன்பம் அனைத்தும் நீங்கும் என்கின்றனர் மூத்தவர்கள். தினசரி நீராடி மஞ்சள் நிற உடையணிந்து பின்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் அர்பணிக்க சகல துன்பங்களும் நீங்கும்.
"சிந்தூரம் சோபனம் ரக்தம் செளபாக்கியம் சுக்வர்தனம்
சுப்தம் காம்தம் ச்சைவ் சிந்தூரம் ப்ரத்திக்ரியாத்தம்
குங்குமத்தை நெய்யில் கலந்து வெள்ளி பொருட்கள் மூலம் விநாயகருக்கு பூசி வர, தொழிலில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். முன்பு சொன்னது போல குங்குமம் மட்டுமின்றி விநாயகருக்கு பிடித்தமானவைகளில் முக்கியமானது எருக்கம் பூ. எருக்கம் பூவிற்கு மனிதர்களின் உடலையும் மனதையும் தூய்மையாக்கும் தன்மை உண்டு. அதில் மாலை செய்து அணிவித்தால் விநாயகரின் அருளுக்கு முழுமையான பாத்திரமாகலாம்.