செவ்வாய் தோஷத்தால் திருமண தடையா? இதை செய்து பாருங்களேன்!

Update: 2021-12-21 00:45 GMT

இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் ஜாதக பொருத்தம் பார்த்து நடைபெறுகிறது. ஜோதிடத்தின் ஓர் அங்கமான ஜாதகத்தில் குறிப்பிட்ட சில பொருத்தங்கள் பார்த்த பின்னரே, அதுவும் அந்த பொருத்தங்கள் அனைத்தும் பொருந்திய பின்னரே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உண்டு. அதிலும் குறிப்பாக செவ்வாய் தோஷம் என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் ஒன்றாகும்.

ஒரே அளவிலான செவ்வாய் தோஷம் இருக்கும் இருவர் திருமணம் செய்து கொள்வது சரியானதே. ஆனால் ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லாமல் போவது அல்லது ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு அதிகமாக இருந்து ஒருவருக்கு குறைவாக இருப்பது போன்ற சூழலில் அந்த குறிப்பிட்ட இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதை குறித்து சிந்திக்க வேண்டும்.

தோஷத்தின் அளவு அதற்கான பரிகாரம் ஒருவருக்கொருவர் மாறுபடும். முறையான ஜோதிடரை அணுகி அதற்கான பரிகாரங்களை தெரிந்து கொண்டு செய்வது நன்மை பயக்கும். அதே வேளையில் இந்த தோஷம் இருப்பவர்களும், குறிப்பாக குறைந்த அளவு தோஷம் இருப்பவர்கள் பின்வருபவைகளை பரிகாரமாக செய்வது வழக்கம்.

செவ்வாய் தோஷத்திற்கு அபத்பாண்டவராக இருந்து காப்பவருள் விநாயக பெருமான் முக்கியமானவர். அவருக்கு வெல்லம் படைத்து சிவப்பு நிற மலர்களை தினசரி அர்பணித்து வர தோஷத்தின் தாக்கம் நீங்கும் என்பது ஐதீகம்

மேலும் அதிகாலையில் எழுந்து நீராடி ஆவும் கம் கணபதியே நமஹ எனும் மந்திர உச்சாடனையை 108 முறை சொல்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

செவ்வாய் தோஷத்திற்கென பிரத்யேகமாக யந்திரங்கள் கிடைக்கின்றன. ஆனால் இது நம்பகத்தன்மை உடையவர்களிடம் வாங்க வேண்டும். இந்த யந்திரத்திற்கு தொடர்ச்சியான பூஜை வழிபாடுகள் செய்து வர தோஷத்தின் தாக்கம் நீங்கும். மேலும் செவ்வாய் கிழமைகளில் தீவிர விரதம் இருக்கலாம். பசியை பொருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை எடுத்து கொள்ளலாம்.

மேலும் கலச விவாகம் செய்வது இந்த தாக்கத்திலிருந்து விடுபெற சிறந்த வழிமுறையாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக பட்சிகளுக்கு உணவு மற்றும் நீர் வழங்குவதும், தொடர்ந்து அனுமன் சாலிசா சொல்லி வருவதும் இந்த தாக்கத்தை குறைக்க உதவும்.

Tags:    

Similar News