பிரம்ம புராணத்தின் படி, உயிர் நீத்த ஆன்மாக்கள் அஷ்வின மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷத்தில் தங்கள் வாரிசுகளால் வழங்கப்படும் படையலை ஏற்றுகொள்ளும் தன்மையை கொண்டுள்ளன. இந்த அனுமதியை யமதர்மராஜன் வழங்கியுள்ளார் என்பது நம்பிக்கை. எனவே இது போன்ற நாட்களில் உதாரணமாக, மாலிபச்சி போன்ற படையலிடும் நாட்களிலில் வாரிசுகள் தங்கள் பித்ருக்களுக்கு படையலிடாமல் போகும் போது அல்லது அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்யாமல் போவதால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என சொல்லப்படுகிறது.
இவ்வாறு நேரும் சாபத்தையே பித்ரு தோசம் என்று அழைக்கின்றனர். இதன் மூலம் வருங்கால சந்ததிகளின் வாழ்வில் ஏதேனும் இடையூறுகள் நேரலாம். மரணத்தில் இரண்டு வகையுண்டு இயற்கை மரணம் மற்றும் செயற்கை மரணம். இந்த செயற்கை மரணம் என்பதற்கு பலவித காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த பித்ரு தோஷம் என்பது ஒருவகை காரணம். குழந்தைகளின் உடல் நலத்தில் ஆரோக்கியமின்மை, மற்றும் நம் அடுத்த தலைமுறையின் வாழ்வில் இடையூறுகள் தொடர்ச்சியாக இருந்தால் பித்ரு தோசம் இருப்பதும் ஒருவகை காரணமாக இருக்கலாம்.
இது போன்ற பித்ரு தோஷத்தின் தாக்கத்திலிருந்து விடுபட நன்கு அறிந்த ஆன்மீக அறிஞர்களை கேட்டு அவர்களின் வழிமுறைகளை கேட்டு நடப்பது நன்மை தரும். மற்றும் பொதுவாக சொல்லப்படும் பரிகாரங்கள் யாதெனில், அவர்கள் மறைந்த நாள், நட்சத்திரம் அல்லது திதியில் அவர்களுக்கான தர்பணத்தை முறையாக வழங்க வேண்டும். மற்றும் ஆலமரத்திற்கு நீர் வார்பது பித்ரு தோசத்தின் முக்கிய பரிகாரமாகும்.
மற்றும் அவர்கள் இறந்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு அவர்களுக்கு நீர் வைப்பது நல்ல பலனை தரும். மேலும் அமாவாசை மற்று பெளர்ணமி நாட்களில் ஏழை எளியவர்களுக்கு அவர்களின் பெயரை சொல்லி அன்ன தானம் செய்வதால் பித்ரு தோஷத்திலிருது விடுபடலாம். வீட்டிற்கு யாசகம் கேட்டு வருபவர்களுக்கு உணவளிப்பது, மற்றும் சூரிய பகவானை வழிபடுவது ஆகியவை பித்ருக்களின் ஆன்ம சாந்திக்கு உதவும்.
எனவே வீட்டிலுள்ள நம் முன்னோர்களின் வரிசையை முறையாக அறிந்து அவர்கள் மறைந்த நாட்களை தெரிந்து கொண்டு அந்த நாளில் முறையே நாம் தர்பணமும், படையலும் இட்டு வர, இல்லாத ஏழை எளியோருக்கு உதவி வர நம்மை அறியாமல் பித்ரு தோஷம் இருப்பின் அதிலிருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம்.
Image : Jagran