பணப் பிரச்சனைகளுக்கு கற்பூர பரிகாரம் தீர்வளிக்குமா? சாஸ்திரங்கள் சொல்வதென்ன?

Update: 2022-10-08 00:45 GMT

கற்பூரம் பெரும் கிருமி நாசினி என்பது நாம் அறிந்ததே. ஆனால் கற்பூரம் நம் செல்வத்தை அதிகரிக்கவும் உதவும் என்பது தெரியுமா?

நீங்கள் உறங்க செல்லும் முன், சில கற்பூரங்களையும், கிராம்பையும் ஏற்றுங்கள். இதனை தினசரி இரு வாரங்களுக்கு செய்யுங்கள். இப்படி செய்வதால் நாங்கள் பணக்காரர் ஆகிவிடலாமா? என எண்ணாதீர்கள். இப்படி செய்வதால் உங்களுக்கிருந்த தடைகள் விலக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கிருந்த தடைகள் விலகி வேலை எளிமையாகும்.

மேலும் வாரத்திற்கு ஒரு முறை, குறிப்பாக சனிக்கிழமைகளில் குளியல் நீரில் சில துளி கற்பூர எண்ணெய்யை சேர்த்து குளித்து பாருங்கள் இதன் மூலம் உங்கள் வருங்காலம் ஒளிவீசுவதோடு, உங்கள் உடலில் பல நோய்கள் அண்டாமலும் இது காக்கும்

மேலும் உறங்குவதற்கு முன் கற்பூரம் ஏற்றி அனுமன் துதி பாடினால், நமக்கு விதிவசத்தால் ஏதேனும் விபத்துகள் நேர இருந்தால் அவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

தொடர்ச்சியாக சில தடைகளை நீங்கள் சந்தித்து கொண்டேயிருந்தால் நீங்கள் வாஸ்து தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்க கூடும். அந்த வேளையில் 2 கற்பூர துண்டுகளை வீட்டின் மூலைகளில் போட்டு வைக்கலாம். அவை கரைந்து போகிற போது அடுத்த துண்டுகளை போட்டு வந்தால் மெல்ல மெல்ல வாஸ்து தோஷத்திலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு.

திருமணத்தடை எனில் 6 கற்பூரத்துண்டுகள், 36 கிராம்பு, சற்று மஞ்சள் அட்சதை இவற்றை துர்கா தேவிக்கு படைத்து வர திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

கற்பூரம் வழிபாடு, பரிகாரம், என ஆன்மீக ரீதியில் பல நன்மைகளை புரிந்தாலும் அறிவியல் ரீதியாக கற்பூரம் நம்மை சுற்றியிருக்கும் காற்றை சுத்திகரிப்பது, கிருமிகளை அழிப்பது மற்றும் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கூட உறுதுணையாக இருப்பது அதன் தனித்துவமான அம்சமாகும்.

உதாரணமாக, உடலில் ஏதேனும் ஒரு இடம் மிக அதிகமாக வலித்தால் அவர்கள் அந்த இடத்தில் கற்பூரத்தை வைத்து தேய்கிற போது வலி குறைய வாய்ப்பு உண்டு.

பரு, தளும்பு போன்ற பிரச்சனை உள்ள இடத்திலும் கற்பூரத்தை தேய்பதன் மூலம் சரும பிரச்சனைகளிலிருந்து விடுபட இயலும்

கற்பூரத்தால் ஆன க்ரீம்கள் சந்தையில் கிடைக்கின்றன, இவற்றை வெடித்த பாதத்தில் முறைப்படி பூசி பராமரித்து வந்தால் வெடிப்பு மிகுந்த பாதங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்

மேலும் கற்பூர எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சைனஸ், சளித்தொல்லை ஆகியவைகளிலிருந்தும் விடுபடலாம். என்கின்றன ஆய்வுகள்.

Tags:    

Similar News