எதை எழுதுவதற்கு முன்பாகவும் பிள்ளையார் சுழி போடுவது ஏன்? ஆச்சர்ய தகவல்

Update: 2023-01-06 00:30 GMT

கடவுளர்களில் முதல் மரியாதைக்குரியவர் விநாயக பெருமான். அவருக்கு முழு முதற் கடவுள் என்று பெயர். எந்த வேலையை தொடங்கும் போதும் விநாயகரை வணங்கி தொடங்குவது தான் நம் மரபு . முன்பொரு காலத்தில் வியாசர் பெருமான் மகாபாரதத்தை சொல்ல சொல்ல விநயாகர் தன் துதிக்கையின் தந்தத்தை முறித்து எழுத தொடங்கினார். தான் எழுதும் வேகத்திற்கு வியாசர் சொல்ல வேண்டும் என்பது, தான் சொல்லும் பொருளை உள்வாங்கி விநாயகர் எழுத வேண்டும் என்பதும் இருவருக்குள்ளான ஒப்பந்தம்

அன்று தொடங்கி நம் மரபில் எந்தவொரு எழுத்துப் பணியானாலும் நாம் பிள்ளையார் சுழியிட்டு எழுதுவது வழக்கம் ஒரு பேனாவை வாங்கினால் கூட அது எழுதுகிறதா என்று பரிசோதிப்பதற்கு பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். சிறு துண்டு காகிதம் தொடங்கி, கடிதம், முக்கிய ஆவணம் என எல்லாவற்றிலும் பிள்ளையார் சுழி போடுகிறோம்.

எதற்காக இப்படி போடுகிறோம். குறிப்பாக பிள்ளையார் சுழி என்பது பெரும்பாலும் “உ” என்ற எழுத்தாகவே இருக்கிறது. இதற்கு பல விதமான புராணகதைகளும், வியக்கியானங்களும் உண்டு. அதில் ஒன்று சுழி என்பது வளைசலான ஒரு கொம்பு. இந்த வளைசலான கொம்பு என்பது விநாயக பெருமானின் துதிக்கை சுழியை குறிப்பதாக ஓர் அர்த்தம் உண்டு. மேலும் அந்த சுழி முழுமையடைந்தால் பூரணத்தை குறிக்கும். பூரணமும் விநயாகர் தான், சூன்யமும் விநாயகர் தான் எல்லையில்ல முழு முதற்க் கடவுளை வணங்கி ஒரு காரியத்தை தொடங்குகிறோம் என்பதை குறிக்கும் விதமாகவே அந்த சுழி போடப்படுகிறது என பெரியோர் சொல்கின்றனர்.

இதற்கு புராணம் கூறும் மற்றொரு விளக்கம் யாதெனில், பிரணவ ஒலியான ஓம் என்பது அ உ ம் என்பதன் மருவிய வடிவம். அவும் என்பதில் அ என்பது படைத்தல் கடவுள் பிரம்மாவையும், உ என்பது காத்தல் கடவுள் விஷ்ணுவையும், ம் என்பது அழித்தல் கடவுள் சிவனை குறிப்பதாகும். இதில் உ எனும் விஷ்ணு பெருமானுக்கு உரிய பீஜ ஒலி, அவருடைய சகோதரியும் மும்மூர்த்திகள் தோன்றுவதர்கு முதன்மையாக தோன்றிய ஆதி பராசக்தியான உமையம்மையை குறிப்பதாகவும் உள்ளது.

அவும் என்பதை வேறு விதமாக அடுக்கினால் உமா என்று வரும். அதனாலேயே அனைத்து உயிர்களுக்கு முன் தோன்றிய உமையம்மையை உமா என்றழைக்கிறோம். அந்த உமா தேவியின் அருளை பெரும் பொருட்டு உ என்பது பிள்ளையார் சுழியாக போடப்படுகிறது என்கிர தத்துவமும் சொல்லப்படுவதுண்டு.

Tags:    

Similar News