ருத்ராக்ஷத்தை ஒரு ஆபரணம் அணிவதை போல வெறுமனே எடுத்து அணிந்து கொள்ளலாமா ?
Rules For wearing Rudraksha.
ஒருவரின் உடல்நிலையையும், மனநிலையையும் சக்தி மிகுந்ததாக மாற்ற மிகச்சிறந்த ஆன்மீக வழி ருத்ராக்ஷம் அணிவது. இது பழங்காலத்திலிருந்தே இருந்து வரும் தொன்று தொட்ட வழக்கமாகும். ஆனால் ருத்ராக்ஷத்தை ஒரு ஆபரணம் அணிவதை போல வெறுமனே எடுத்து அணிந்து கொள்ளலாமா?
இல்லை. அதற்கென சில விதிமுறைகள் உண்டு. ருத்ராக்ஷத்தை அணிவதற்கு முன்பாக அதனை முறையாக சக்தியூட்டி அணிவது அவசியம். ருத்ராக்ஷத்தை நல்லதொரு நாள் பார்த்து சரியான நேரத்தில் அணிவது கூடுதல் நன்மையை தரும். இதற்கு பரிந்துரைக்கப்படும் நாள் யாதெனில் திங்கட்கிழமைகளில் வரும் சுக்லபக்ஷத்திலோ அல்லது சிவனுக்குரிய நாட்களிலோ இதனை அணியலாம். ருத்ராக்ஷம் அணியபோகிற நாளில், அதிகாலை எழுந்து நீராடி, பூஜையறையில் முறையான பூஜைகள் செய்து சிவனை வணங்கி இதனை அணிந்து கொள்ளலாம்.
அணிவதற்கு முன்பாக, ருத்ராக்ஷத்தை தூய்மையான நீரில் அலசி, சில மணி நேரம் காய்ச்சாத சுத்தமான பசும் பாலில் ஊர வைக்க வேண்டும். பின்பு அதனை நீரில் அலசி, அடுத்த சில மணி நேரம் அந்த ருத்ராக்ஷத்தை சுத்தமான பசும் நெய்யைல் ஊர வைக்க வேண்டும். அதற்கு பின் அதனை எடுத்து நீரில் அலசி, திருநீறு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதுவே ருத்ராக்ஷத்தை சக்தியூட்டும் செயல்முறையாக நம் மரபில் சொல்லப்பட்டுள்ளது.
அதன் பின் அணிவதற்கு முன்பாக கணபதியை வணங்கலாம். இந்த ருத்ராக்ஷத்தை அணிவதில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் முழு முதற் கடவுளை வணங்கி, ருத்ராக்ஷத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி, மலர்களை சமர்ப்பித்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபடுவது கூடுதல் நலம்.
மற்றும் 108 முறை ஓம் நமச்சிவாய மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. ருத்ராக்ஷத்தில் பல வகை உண்டு. அதற்கு பல முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பீஜ மந்திரம் உண்டு. வாய்ப்பிருந்து உங்களுக்கு நீங்கள் அணியவிருக்கும் ருத்ராக்ஷ வகையின் பீஜ மந்திரம் தெரிந்திருந்தால், 27 முறை சொல்வது மிகவும் சிறப்புமிக்கதாகும்.
இறுதியாக அந்த ருத்ராக்ஷத்தை முழு பக்தியுடன் ஒருவர் அணிந்து கொள்வதால் இந்த செயல்முறை முழுமையடைகிறது. இதில் ஒரு செயல்முறை நடைமுறை சிக்கல் காரணமக தவர்ந்து போனால் வருந்த வேண்டாம். ருத்ராக்ஷத்தின் சக்தியூட்டும் செயல்முறையை மட்டும் எந்த சமரசமுமின்றி செய்வது அவசியமாகும்.
Image : iStock