இந்து மரபுகளில் இருக்கும் ஆச்சர்யமூட்டும் அறிவியல் அம்சங்கள் ஒரு பார்வை
இருகைக்கூப்பி நமஸ்கரிப்பது ஏன்?
வணக்கம். இது இந்து மரபில் மிகச்சாதரணமாக பின்பற்றப்படும் ஒரு வணங்கும் முறை. இரு கைகளைக்கூப்பி வணக்கம் அல்லது நமஸ்காரம் என்பது ஒரு மரியாதைக்குரிய உடல்மொழியாக கருதப்படுகிறது. ஒரு கோவிலுனுள் நுழைகிற போதோ அல்லது கடவுள்களை உணர்கிற போதோ வயதில் மூத்தோரை காண்கிற போதோ இவ்வாறு நாம் செய்வது வழக்கம். இருக்கைகளை கூப்பி நமஸ்கரித்தல் என்பது யோக மரபில் ஒரு வகையான முத்திரை. ஆனாலும் நாம் பெரும்பாலான நேரங்களில் நம் மரியாதையை, நன்றியுணர்வை, மேலும் பல நல்லதிர்வுகளை நாம் உணர்கிற போது நமஸ்கரித்து வெளிப்பத்துகிறோம்.
இந்த கைகூப்பி வணக்கம் செலுத்தும் முறைக்கு பின் சொல்லபடும் தாத்பரியம் என்பது நாம் வணங்குவது யாராக அல்லது எதுவாக இருந்தாலும் சரி, அது உருவில் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருந்தாலும் சரி, அதன் சக்தி எந்த அளவில் தீவிரமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி நாம் வணங்கும் ஒரு உயிர் அல்லது ஒரு உயிரற்ற எதுவாக இருந்தாலும் அது இந்த உலகில் இருப்பதற்கு பின் ஒரு தெய்வீக ஆற்றல் இருக்கிறது. அந்த தெய்வீக ஆற்றலை அந்த தெய்வீக தன்மையை நாம் வணங்குகிறோம் என்பதே நாம் கைக்கூப்பி ஒன்றை வணங்க்குவதின் தார்பரியம் என பெரியவர்கள் சொல்ல அறிந்து உள்ளோம்.
ஆனால் இதன் பின் இருக்கும் அறிவியல் விஞ்ஞானம் என்பது என்ன? என்ற கேள்வி உண்டு. கைகளை இணைத்து வணங்குகிற போது ஒரு விரல் மற்றொரு விரலோடு இணைந்து ஒரு அழுத்தத்தை நரம்புகளில் உண்டாக்குகிற போது அந்த நரம்புகளுக்கு தொடர்புடைய உடல் உறுப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தமும், தாக்கமும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் மேலை நாடுகளில் பிறரை வரவேற்க, அல்லது உணர்வுகளை வெளிப்படுத்த கைகளை குலுக்குவது வழக்கம். இந்த முறையில் ஒருவரிடம் இருக்கும் நுண்ணுயிர்கள் கைக்குலுக்குதலின் மூலம் நமக்கு கடத்தப்படும் வாய்ப்பு உண்டு. இதில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். என்பதால் நமஸ்கரித்து வணக்கம் செலுத்தும் முறை அறிவியல் ரீதியாகவும் சிறந்த முறையாக கருதப்படுகிறது.